விமலாவின் அக்கா ஊரிலிருந்து இரவு 12 மணிக்கு அவள் வீட்டுக்கு வரும்வழியில் தன் தங்கையோட கணவன் பாலியல் தொழிலாளியை பைக்ல கூட்டிட்டு போறத பார்த்துடுறாங்க.
விமலாவின் வீட்டுக்கு சென்றதும் முதல் வேலையாய் அவளிடம் சொன்னாள் அக்கா. அவள் அதை கொஞ்சம் கூட பெரியதாய் எடுத்துக்கவில்லை. அது வேற ஏதாவது முக்கியமான காரணமாய் இருக்கும் நீ கவலை படாதேன்னு அக்காவிற்கே சமாதானம் சொன்னாள் விமலா.
அந்த பதிலை கேட்டு அக்கா கொதித்தாள் விமலாவை திட்டினாள். "உலகம் தெரியாமல் இருக்கியே. யாரையும் நம்பிடாதே வந்ததும் உன் புருஷன் கிட்ட கேளு" என்று சொன்னாள்.
ஆனாள் விமலாவோ "ஏதாவது முக்கியமா இருந்தா அவரே என் கிட்ட சொல்லுவாரு இல்லனா சொல்ல மாட்டாரு. அதை நான் கேட்டு அவர் மனச காயப்படுத்த விரும்பல" என்று சொன்னாள்.
அந்த விளக்கத்தை விமலாவின் அக்காவாள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதனால் தங்கையின் கணவன் வரும்போதும் போகும்போதும் அவனை ஒரு மாதிரியாய் திட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தாள் அக்கா.
ஏன் இப்படி பேசுறாங்க என்று அவன் புரியாமல் விழித்தான். அதை அவன் தன் மனைவியிடம் கேட்டான். "தெரியலங்க" என்று சொல்லி சமாளித்தாள்... அந்த அளவுக்கு அவன் மீது பாசம் கலந்த நம்பிக்கை.

ஒருநாள் விமலாவும் அவளுடைய அக்காவும் கடைக்கு சென்று திரும்பி வரும்போது எதேர்ச்சையாய் ரோட்டில் அதே பாலியல் தொழில் செய்யும் பெண்ணை பார்த்தார்கள்.
அவளை பார்த்ததும் விமலாவுடைய அக்கா அவளை அசிங்கமாய் திட்ட அந்த பெண் லேசான கண்ணீர் துளிகளோடு "அன்னைக்கு எனக்கு திடீரென கால்ல அடிபட்டுடுச்சு கா. கைல காசு இல்ல. ராத்திரி 12 வேற இருக்கும் அந்த நேரத்துல யாருமே இல்ல. அப்போதான் உங்க கணவர் வந்தார். வந்ததும் அவரிடம் காசு கேக்காமல் அதுக்கு தான் கூப்பிட்டேன் . என்னை அவர் பார்த்ததும் நான் என்ன நிலமைல இருக்கேனு புரிஞ்சிக்கிட்டு விவரத்த கேட்டாரு. சொன்னேன். உடனே என்னை பைக்ல கூப்டுட்டு போய் என்ன ஹாஸ்பிடல்ல சேர்த்தார் கா. நான் குணமானதும் வேற எங்கனா வேலைக்கு போறீயான்னு கேட்டாரு?. நான் சரி சொன்னதும் ஒரு எடத்துல சொல்லி வேலை வாங்கி கொடுத்தாரு...
இப்பா நான் கொஞ்சம் கௌரவமான வாழ ஆரம்பிச்சிட்டேன்.. எல்லாம் அவரால தான் என்று சொல்லி முடித்தாள்".
இப்பா நான் கொஞ்சம் கௌரவமான வாழ ஆரம்பிச்சிட்டேன்.. எல்லாம் அவரால தான் என்று சொல்லி முடித்தாள்".
விமலா அவளுடைய அக்காவின் பக்கம் திரும்பி "இது தான் என் புருஷன்" என்று அவளிடம் அக்காவிடம் கம்பீரத்துடனும் பெருமையுடனும் சொன்னாள்.
அவளுடைய அக்கா வெட்கி தலை குனிந்தாள்.
அவளுடைய அக்கா வெட்கி தலை குனிந்தாள்.