தொழிலில் பெரியதாய் நஷ்டம் வந்தது பாண்டியனுக்கு..
சோகமே அவன் வாழ்க்கையாய் ஆனதால் மிகுந்த விரக்தியோடு இருந்தான்....
எங்கே போறதுனே தெரியாமல் தெரு தெருவாய் திரிந்தான்..
அப்போது எதிரில் அவனுடைய பள்ளி ஆசிரியர் வந்தார்.. பாண்டியனை பார்த்ததும் அவரும் இவனை எளிதாய் அடையாளம் கண்டுகொண்டார்....
பாண்டியனை பார்த்ததும் இவன் ஏதோ சோகமாய் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டார் ஆசிரியர்.
"என்ன ஆச்சு பா ஏன் இவ்வளவு சோகமா இருக்க?" என்று கேட்டார் ஆசிரியர்.
"இல்ல சார் தொழில்ல எல்லாமே நஷ்டமாயிடிச்சு சார். இப்ப என் கிட்ட எதுவுமே இல்ல சார். எங்க போறதுன்னு தெரில என்ன பன்றதுனும் புரியல " என்று வருத்ததோடு புலம்பிக்கொண்டிருந்தான் பாண்டியன்.
அவன் சொன்னதை பொறுமையாய் கேட்டுக்கொண்டு அவன் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தார்.
அறைந்ததும் அவன் கண்ணிலிருந்து லேசான கண்ணீர் தானாய் வெளிவந்தது அதை துடைத்துக்கொண்டே "என்ன சார் அடிச்சிட்டீங்க?" என்று பதறியபடி கேட்டான்.
"உன் கிட்ட எதுவுமே இல்லன்னு சொன்ன?".
"அடி வாங்கனுதும் அழறதுக்கு உன் கண்ணு இருக்கு அத உடனே துடைக்க உன் கை இருக்கு. அப்புறம் வேற என்ன வேணும் உனக்கு.
காலு இல்லாதவன் நடக்கனும்னு நினைச்சா எவ்வளவு தூரம் வேணாலும் நடக்கலாம்.. ஆனா காலு இருந்தும் நம்பிக்கை இல்லேன்னா அவனால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. போடா போய் நம்பிக்கையோடு நட. இப்படி நடுதெருவில நடக்காத" என்று அவன் மண்டையில் உரைக்கும் படி சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் ஆசிரியர்...
அதை கேட்ட பிறகு தான் தெளிவு பிறந்தது அவனுக்கு.
வாத்தியார் அடித்தது அவன் கன்னத்தில் வலிக்கவில்லை இப்போது இதயத்தில் வலித்துக்கொண்டிருந்தது.
நம்பிக்கையோடு நடை போட ஆரம்பித்தான்.

2 comments:
Good Story
Nambikkai piranthathu....
Post a Comment