Wednesday, 30 September 2015
Monday, 28 September 2015
யார் உன் நண்பன்?
உன்னிடம்
கையிலும் பையிலும்
காசு கூட இல்லாமல்
காசு கூட இல்லாமல்
எவன் ஒருவனிடம் சேர்ந்து
உன்னால் எந்த வித
தடு மாற்றமில்லாமல்
தடு மாற்றமில்லாமல்
வெளியில் செல்ல முடிகின்றதோ
அவனே உன் நண்பன்..!!!
மச்சி களம்பி வீட்டுக்கு வாடா..
என்று சொன்னவுடன் ஏன்
என்று ஒரு வார்த்தைக் கூட கேட்காமல்
ஒருவன் அடுத்த நிமிடமே
உன் வீட்டுக்கு வந்தால்
அவனே உன் நண்பன்....!!!!
நீ செய்யும் தவறை
சரியான நேரத்தில் சுட்டிக்காட்டி
அதை - சரி செய்ய
உனக்கு உதவி
புரிகிறான் என்றால்
அவனே உன் நண்பன்...!!!
சந்தோசத்தை
ஆயிரம் நபரிடம்
பகிர்ந்து கொண்டாலும்
சோகம் என்று வரும்போது
யாருடைய ஞாபகம்
உனக்கு உடனே வருகிறதோ
அவனே உன் நண்பன்...!!!
நகைச்சுவையான
தருணங்களை தவிர
மற்ற நேரங்களில் யார்
ஒருவனிடம் உண்மையை மட்டும்
பேசுகிறாயோ
அவனே உன் நண்பன்...!!!
Thursday, 24 September 2015
Friday, 18 September 2015
வீரப் பெண்மணி (கவிதை)
1) ஜாக்கிரதை.
அவளை
தொட நினைப்பவர்களுக்கு
நினைவிருக்கட்டும்
துப்பட்டாவும் வாளாக மாறும் என..!!!!
நினைத்த சூரியனை
உன் கண் பார்வையால்
சுட்டு விட்டாயோ
இப்படி மேக கூட்டத்திற்குள்
ஓடி ஒளிந்துக்கொண்டதே...!!!
3) அவளின் வருகை
தென்றலில் புயல்
கடந்தது சென்றது
போல் இருந்தது
போல் இருந்தது
அவளின் வருகை...!!
Labels:
கவிதைகள்
Thursday, 10 September 2015
இருளில் வெளிச்சம் (சிறுகதை).
வளர்மதியின் தொந்தரவு தாளாமல் வாணி "சரி வா கார் ஓட்ட சொல்லி தரேன் என" அந்த பரந்த பெரிய மைதானத்துக்கு மாலை 6.00 மணியளவில் கூட்டிக்கொண்டு வந்தாள். அந்த மைதானத்தை சுற்றி வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் தான் இருந்தது. மைதானத்தின் நடுவே 8 நபர்கள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தது போல தெரிந்தது. இவர்கள் அந்த மைதானத்தை சுற்றி கார் ஓட்டும் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
அவர்களை தவிர மேலும் இரண்டு பேரும் கார் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நேரம் ஆக ஆக இருள் வெளிச்சத்தை விழுங்கிக் கொண்டிருந்தது. கார் ஓட்டும் ஆர்வத்தில் அந்த இரண்டு காரும் அவர்களுடைய பயிற்சியை முடித்து கொண்டு கிலம்பியதை வாணியும் வளர்மதியும் கவனிக்கவில்லை.
அவர்கள் கார் ஓட்டும் சந்தோசத்திலிருந்து வெளியே வந்து பார்க்கும் போது நேரம் சரியாக 7.15 ஆக இருந்தது. அப்போது அந்த மைதானத்தை சுற்றி இருள் மட்டும் தான் இருந்தது. இவர்களின் கார் வெளிச்சமும் அந்த நபர்கள் வேலை செய்யும் அருகே ஒரு சின்ன விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது.
வாணிக்கு லேசாக பயம் வந்தது. "வளர்மதி! ரொம்ப இருட்டா இருக்கு. இங்க இருக்கறது எனக்கு சரியாய் படல இப்போ போயிட்டு வேற ஒரு நாள் வரலாம் " என்று வாணி சொன்னாள்.
வளர்மதி ஓட்டும் ஆர்வத்தில் இருந்ததால் "அக்கா இன்னும் கொஞ்சம் நேரம் ஓட்டலாம் ப்ளீஸ் கா ப்ளீஸ் கா ப்ளீஸ் கா" என்றாள் வளர்மதி. வாணியால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. சரி என்று சொன்னாள்.
வெளிச்சத்தில் பார்த்த அந்த நபர்களை இருட்டில் பார்க்கும் போது வாணிக்கு பயம் சிறிது சிறிதாக அதிகரித்தது. அந்த நபர்களை சுற்றி பெரிய வட்டமிட்டு கார் பயிற்சி செய்து கொண்டிருந்தாள் வளர்மதி. வாணிக்கு பயம் இருந்தததால் அவர்களுடைய நடவடிக்கையை நிமிடத்திற்கு 3 முறை கண்காணித்துக்கொண்டே இருந்தாள்.
மணி 7.35 ஆனது. அப்போது இவர்களுடைய காரை காட்டி ஒருவன் ஏதோ ஒன்று பக்கத்தில் இருப்பவனிடம் சொன்னான். அதை தூரத்தில் இருந்து வாணி பார்த்து விட்டாள். அதை வளர்மதியிடம் வாணி சொல்ல. அப்பொழுது தான் ஆபத்தில் இருக்கிறமோ என்ற பயம் வளர்மதிக்கு வர ஆரம்பித்தது.
அந்த குழுவிலிருந்த இரண்டு பேர் இவர்களின் காரை நோக்கி வேகமாய் நடந்துவந்தார்கள்.அவர்கள் இவர்களை பார்த்து தான் வருவதைவாணியும் வளர்மதியும் உணர்ந்து விட்டனர். அந்த இரண்டு பேரில் ஒருவன் லுங்கியை கட்டிக்கொண்டு பெரியதாக தாடி வளர்த்திருந்தான். இன்னொருவன் பேன்ட் சட்டை போட்டுக்கொண்டு நட்டு போல்டு உடைய காது குத்திகொண்டு இருந்தான்..
அவர்கள் இவர்களுடைய காரை நோக்கி நிறுத்து நிறுத்து என்று சொல்லிக்கொண்டே வேகமாய் வந்தார்கள்... "வளர்மதி !!! இப்போது நீதான் டிரைவர் சீட்ல இருக்க இப்போ நாம மாறி உட்கார்வதற்குள் நம்மள அவங்க பிடிச்சிடுவாங்க .. அதனால் நீயே காரை ஒட்டு. " என வாணி கட்டளை இட்டாள்.
என்ன பன்றதுனே தெரியாம சரி என்று ஒப்புக்கொண்டாள்.
அவர்கள் கிட்ட நெருங்க நெருங்க வளர்மதி காரை விர்ர்ரென்று கலப்பிக்கொண்டு காரை கலப்பினாள். இவர்கள் கார் கலம்புவதை கவனித்த அந்த இரண்டு நபர்கள் ஏய் ..!!! நிறுத்து ..நிறுத்து .. என்று கத்தினார்கள்.
அந்த கார் இவர்கள் குரலுக்கு நிற்காது என்று தெரிந்த கொண்ட பின் "டேய் மச்சி இந்த கார் நிக்க மாட்டுதுடா வாங்கடா " என்ற பெரியதாக கத்தினான்.
வளர்மதி புதியதாய் ஒட்டுவதால் கார் அந்த பக்கமும் இந்த பக்கமும் வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது.
வளர்மதிக்கு பதட்டத்தில் என்ன செய்வதன்றே தெரியாமல் அங்க இருந்த மண் உள்ள பள்ளத்தில் வண்டியை செலுத்தும் போது அதில் இரண்டு சக்கரங்களும் மாட்டிக்கொண்டது. "ஏய் என்னடி பண்ற ஒட்டு டி ஒட்டு டி என்று அலறினாள் " வாணி.
" மச்சி வண்டி மாட்டிகிச்சி இப்ப புடிச்சிடலாம். வாங்க டா " என்று அவர்களுடைய கூட்டாளிகளை கூப்பிட்டான். இவர்கள் இருவரும் அந்த காரை நோக்கி வேகமாய் ஓடினர்.
அவனுடைய கூட்டாளியின் குரலை கேட்ட அடுத்த நொடியே மீதி இருந்தா ஆறு பெரும் மூன்று மோட்டார் பைக்கை கலப்பினார்கள். வாணி கதற ஆரம்பித்து விட்டாள் "ஏய் அவுங்க நம்மள நோக்கி பைக்ல வராங்காடி வண்டி ஸ்டார்ட் பண்ணு டி ஸ்டார்ட் பண்ணுடி என்று கத்தினாள் ".
அதை எடுப்பதற்குள் இவர்களை நோக்கி அந்த இரண்டு பேரும் ஓடி வந்து இவர்களின் கார் முன்னே நின்றார்கள். பைக்கில் வந்த கூட்டாளிகளும் இவர்களுடைய காரை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்.
வாணியும் வளர்மதியும் பயத்தின் உச்சியில் இருந்ததால் அவர்கள் வியர்வையிலேயே குளித்து விட்டனர்.. அந்த சிறிய நேரத்திற்குள் இந்த உலகத்தில் நடந்த அத்தனை பலாத்கார நிகழ்வுகளின் பத்திரிக்கை செய்திகளும் அவர்கள் கண் முன்னே வந்து சென்று விட்டது.
அந்த இருவர் வளர்மதியின் கார் ஜன்னல்அருகே நெருங்கினார்கள்.
வாணியும் வளர்மதியும் பயத்தில் அவர்களுடைய எச்சிலை விழுங்கிக்கொண்டு நம்மள என்ன செய்ய போறானோ என் அவனையே பார்த்தார்கள்.
லுங்கி கட்டியவன் அவர்களிடம் கிட்ட நெருங்கி "ஏம்மா......!!! அங்க சிமெண்ட்ல கிரிக்கெட் விளையாட பிட்ச் போட்டிருக்கோம் அதன் மேல ஏத்திடாதீங்கனு சொல்ல வந்தா இப்படி நிற்காமலே ஒட்டினு வந்து பள்ளத்தில சிக்கிக்கிட்டீங்களே " என்று அப்பாவியாய் பேசினான்.
"சரி காரி தள்ளி விடுங்கடா" என்று அவன் அவர்களுடைய கூட்டாளிகளிடம் சொன்னான்.
மீதி ஆறு பேரும் கார் பின்புறம் போய் காரை தள்ளி விட வாணியின், வளர்மதியின் பயமும் பள்ளத்திலிருந்த காரும் ஒரே நேரத்தில் விடு பட ஆரம்பித்தது....!!!!
Labels:
சிறுகதைகள்
Thursday, 3 September 2015
அவள் (கவிதை )....
உன்னை பற்றி கவிதை எழுத துடிக்குதடி மனது
ஆனால் உன் நினைப்பு அடிக்கடி வந்து தடுக்குதடி..
சில நிமிடங்கள் உன்னை நினைத்துவிட்டு
எழுதலாம் என்று நினைத்தேனடி - ஆனால்
என் மொத்த நிமிடத்தையும்
உன் நினைவுகள் ஆட்கொண்டதடி....!!!
உன்னை தூரத்தில் தான் பார்த்தேனடி
பார்த்தவுடன் பட்டென்று மனதுக்குள் ஒட்டிக்கொண்டாயடி.
உன் மேல் எனக்கு வந்த காதல் வாழ்க்கையின்
ஒரு அங்கம் தான் என்று நினைத்தேனடி - ஆனால்
நீதான் என் வாழ்க்கையே ஆகிவிட்டாயடி.
உன் முக அழகை என் பர்ஸுக்குள் வைத்தேனடி
உன் அக அழகை என் மனதுக்குள் வைத்தேனடி.
என்னை காணாமல் நீ அழும் போது ஒரு சிறு குழந்தை போல ஆனாயடி..!!
நான் தோல்விகளில் துவளும் போது சோதனைகளை கடக்க கற்று தந்தாயடி.
உன் வீரத்தை பார்த்து அப்போது வியந்தேனடி..
உன்னை குழந்தை என்று நினைத்த என்னை நினைத்து வருந்தினேனடி....!!!!
உன் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒன்றாக ஆனதடி
இந்த இனிமையான வாழ்க்கை என்றுமே நிலைக்கட்டுமடி....!!!!
Labels:
கவிதைகள்
Subscribe to:
Comments (Atom)









