ஜானகி வழக்கத்தை விட அன்று மிகவும் படபடப்பாக இருந்தாள். அதற்கு காரணம் அவளுடைய காதலனை அவள் பார்க்க போகிறாள் என்பது தான்...
ஜானகியும் ரமேஷும் ஒரு தவறான அழைப்பில் அறிமுகமாகி அவர்கள் நட்பை தொடர்ந்தனர். அந்த நட்பு ஒரு கட்டத்திற்கு மேல் காதலாய் கனிந்தது ...
ஜானகி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்க மாட்டாள். அதற்காக அவள் ஏகப்பட்ட அவமானங்களை மற்றவர்களின் கேலி கிண்டல் மூலமாய் சந்தித்தவள் . அதனால் யாரிடமும் அதிகமாக பேச மாட்டாள்..
ரமேஷின் அந்த தொலைபேசி அழைப்பு தான் அவளுடைய வாழ்க்கையை சந்தோசமாய் மாற்றியது. அவனோட பேசும் ஒவ்வொரு நொடியும் அவளுக்கு அளவிட முடியாத அளவுக்கு சந்தோசத்தை வாரி வழங்கியது. ஆனால்
அது இன்றோடு முடிய போகிறது என்று மிகவும் பயத்தோடு இருந்தாள்.
ஏற்கனவே ஒரு முறை இருவரும் நேரில் பார்க்கலாம் என்று முடிவு செய்தார்கள். அப்போது ஜானகி மட்டும் ரமேஷை தூரத்தில் இருந்து பார்த்து விட்டாள். அவனுடைய அழகும் வசதியும் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு கண்டிப்பாக இவன் நம்மை எற்றுக் கொள்ள மாட்டான் என்று முடிவு செய்து அவனை பார்க்காமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள் . அவன் ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு அலுவலகத்தில் வேலைப்பளு என்று காரணம் சொல்லிவிட்டாள்.
அதன்பின் ஒவ்வொரு முறை அவனுடைய அழைப்பு வரும்போதுலாம் ஒருவித பதட்டத்தோடே பேசுவாள்.
ரமேஸ் இன்று உன்னை கண்டிப்பாக நான் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டான். இவளும் ஏதோதோ காரணம் சொல்லி பார்த்தாள் .. அவன் எதையுமே ஏற்றுக்கவில்லை.
அவனும் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த பூங்காக்கு வந்து விட்டான். இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இன்றோடு நம்முடைய மொத்த மகிழ்ச்சியும் முடிய போகுது என்று பயத்தோடு கண்ணீரும் வர ஆரம்பித்துவிட்டது.
ரமேஸ் தொடர்ந்து தொலைபேசியில் அவளுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தான். வேறு வழியே இல்லாமல் அவனை பார்க்க அந்த பூங்காக்கு சென்றாள் .
பூங்கா வாயிலிலே ரொம்ப நேரம் யோசித்து கொண்டே இருந்தாள். இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று முடிவு செய்து ஒவ்வொரு அடியையும் ஆயிரம் யோசைனகளுடன் எடுத்து வைத்தாள்.
அவள் அவனை பின்புறம் நெருங்குவதற்கும் ரமேஸ் அவளை தொலைபேசியில் அழைப்பதற்கும் நேரம் ஒரு சேர இருந்தது. ரமேஸ் மெதுவாக பின்புறம் திரும்பினான். இங்கே ஜானகி தான் நிற்கிறாள் என்று கண்டு பிடித்து விட்டான்.
அவளை பார்த்ததும் அவன் முகம் கோபமாய் மாறியது. அவன் அவளை கிட்ட நெருங்கி சென்றான். அவன் கிட்ட நெருங்க நெருங்க அவளுக்கு பயமும் பதற்றமும் அளவிட முடியாத அளவு அதிகரித்தது.
அவன் அவளை கிட்ட நெருங்கி முறைத்து தலையில் செல்லமாய் ஒரு சின்ன குட்டு வைத்து "உனக்காக எவ்வளவு நேரம் காத்துற்றுக்குது (காத்து கொண்டிருப்பது ) பாரு உனக்காக வாங்கி வைத்த பனியாரம் கூட ஆறி போச்சு " என்று சொன்னான்.
அவனுடைய பேச்சில் ஒரு சிறு தடுமாற்றம் கூட தெரியாததால் அவளுடைய அந்த பயம் ஆனந்த கண்ணீராய் மாறியது. அந்த கண்ணீரோட அவனோட மார்பில் முகம் புதைத்து அழுது கொண்டே சிரித்தாள்.. அவனும் இவளை பார்த்த சந்தோசத்தில் அவளுடைய முதுகை வருடிவிட்டான்.

1 comment:
Nice short story!!!
Post a Comment