ட்ராபிக் ரூல்ஸ மதி...!!
1. வண்டில மெல்லமா போனா நீ கெத்துவேகமா போனனா போய்டுவ செத்து.
2. சிக்னல்ல ரெஸ்ட் எடுக்குற போல நில்லு
ரேசுக்கு போற போல நிக்காத.
3. வண்டிய பார்த்து பதமா ஓட்டு
எல்லாரையும் பயமுறுத்துற போல ஓட்டாதே .
4. சீக்கா (Sick) போறதுக்கு பதிலா
கார்ல இருக்குற
சீட்டு பெல்ட் போட்டு போலாம்.
வோட்டு போட்டு பேசு...!!!
1. லஞ்சத்த ஊழல ஒழிக்கணும்னு ஆசைபட்டாமுதல்ல தேர்தல் நேரத்தில ஓட்டு போடு.
2. ஓட்டு போட்டா ஒழிஞ்சிடுமானு கேக்காத.
அத நீ ஓட்டு போடுற ஆள பொறுத்து இருக்கு.
3. ஊழல் கட்சின்னு தெரிஞ்சும் அவர்களுக்கு ஓட்டு போடுறத விட்டுட்டு
புதிய ஆளுங்கள தேர்ந்தெடுத்து ஓட்டு போடு.
4. புதுசா வந்தா ஊழல் பண்ண மாட்டாங்களா லஞ்சம் வாங்க மாட்டாங்களான்னு நீ கேப்ப அதற்கான பதில் இங்கே புதுசா ஒருத்தர் வந்தாங்கனா ஊழலும் லஞ்சமும் குறையும். எப்படினா புதுசா வந்ததும் எல்லாத்தையும் தெரிஞ்சிக்க சில வருடங்கள் ஆகும். அதற்குள்ள அடுத்த தேர்தல் வந்துடும்.
தேசபக்திய இப்படி காட்டு...!!!
கிரிக்கெட்ல ஜெயிக்கும் போது நீ சந்தோசபட்டா மட்டும் உனக்கு தேசபற்று இருக்கும்னு அர்த்தம் இல்ல.
1. ரோட்ல குப்பை போடாத போதும் எச்சில் துப்பாத போதும்.
2. சிக்னல்ல நிற்கும்போது
3. தேர்தல்ல வோட்டு போடும்போது.
4. உன் வேல சீக்கிரம் முடியும்னு லஞ்சம் கொடுக்காம இருக்கும் போதும்.
5. லைன்ல ஒழுங்கா நிற்கும்போதும்.
உன் தேசபக்தி அழகா தெரியும்....
No comments:
Post a Comment