Wednesday, 27 April 2016

நம்பிக்கை (சிறுகதை)

தொழிலில் பெரியதாய் நஷ்டம் வந்தது பாண்டியனுக்கு..

சோகமே அவன் வாழ்க்கையாய் ஆனதால் மிகுந்த விரக்தியோடு இருந்தான்....

எங்கே போறதுனே தெரியாமல் தெரு தெருவாய் திரிந்தான்..

அப்போது எதிரில் அவனுடைய பள்ளி ஆசிரியர் வந்தார்.. பாண்டியனை பார்த்ததும் அவரும் இவனை எளிதாய் அடையாளம் கண்டுகொண்டார்....

பாண்டியனை பார்த்ததும் இவன் ஏதோ சோகமாய்  இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டார் ஆசிரியர்.

"என்ன ஆச்சு பா ஏன் இவ்வளவு சோகமா இருக்க?" என்று கேட்டார் ஆசிரியர்.

"இல்ல சார் தொழில்ல எல்லாமே நஷ்டமாயிடிச்சு சார். இப்ப என் கிட்ட எதுவுமே இல்ல சார். எங்க போறதுன்னு தெரில என்ன பன்றதுனும் புரியல " என்று வருத்ததோடு புலம்பிக்கொண்டிருந்தான் பாண்டியன்.

அவன் சொன்னதை பொறுமையாய் கேட்டுக்கொண்டு அவன் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தார்.

அறைந்ததும் அவன் கண்ணிலிருந்து லேசான  கண்ணீர் தானாய் வெளிவந்தது அதை துடைத்துக்கொண்டே "என்ன சார் அடிச்சிட்டீங்க?" என்று பதறியபடி கேட்டான்.

"உன் கிட்ட எதுவுமே இல்லன்னு சொன்ன?".

"அடி வாங்கனுதும் அழறதுக்கு உன் கண்ணு இருக்கு அத உடனே  துடைக்க உன் கை இருக்கு. அப்புறம் வேற என்ன வேணும் உனக்கு.
காலு இல்லாதவன் நடக்கனும்னு நினைச்சா எவ்வளவு தூரம் வேணாலும் நடக்கலாம்..  ஆனா காலு இருந்தும் நம்பிக்கை இல்லேன்னா அவனால  ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. போடா  போய் நம்பிக்கையோடு நட. இப்படி நடுதெருவில நடக்காத" என்று அவன் மண்டையில் உரைக்கும் படி சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் ஆசிரியர்...

அதை கேட்ட பிறகு தான் தெளிவு பிறந்தது அவனுக்கு.

வாத்தியார் அடித்தது அவன் கன்னத்தில் வலிக்கவில்லை இப்போது இதயத்தில் வலித்துக்கொண்டிருந்தது.

நம்பிக்கையோடு நடை போட ஆரம்பித்தான். 

Thursday, 21 April 2016

இதுதான் உலகம்....



நீ நல்லவனா இருந்தனா
கெட்டவனு சொல்லும்
கெட்டவனா இருந்தனா
நல்லவன்னு சொல்லும்

உன்ன விட சுமாரா வேலை
செய்றவனுக்கு தான்
எல்லாம் கொடுக்கும் ...!!

நீ விழுந்து கிடக்கும் போது
உனக்கு உதவாது
நீ முன்னேறும் போது
வயித்தெரிச்சல் படாம இருக்காது

எவனுக்கு காசு தேவை பட்டாலும்
உன்னை தான் கூப்டுவான்
உனக்கு காசு தேவை பட்டா
ஒருத்தனும் இருக்க மாட்டான்...!!!

Tuesday, 19 April 2016

குட்டிக் கருத்து

வாழ்க்கை

கூட்டமா ஒரு பஸ் போகுதுனா பின்னாடியே
ஒரு பஸ் காலியா வரும்னு அர்த்தம்
அதே போல தான் நம் வாழ்க்கைல வர வாய்ப்பும்...!!!


நியூட்டனின் மூன்றாம் விதி..
குழந்தையையும் மனைவியையும்
திட்டி விட்டு ஆபிசுக்கு சென்றான்
அங்கே மேனேஜர் அவனை திட்டினார்..

நட்பின்அழகு..!!

போனில் ரமேஷ் "என்னடா வேணும்"
ராகேஷ் "உன் அன்பு டா "
ரமேஷ் "காசு எவ்வளோ டா வேணும்"...!!!
ராகேஷ் "1000"
ரமேஷ் "அனுப்புறேன்"

கோபம் ஆகாது...!!

"அவர்களை அடிச்சிட்டு வந்து என்ன அடி"
 என்று இரண்டு குண்டர்களிடம்
மாட்டிவிட்டு பையன்
வீட்டுக்கு சென்று விட்டான்.


Sunday, 17 April 2016

கோபம் (குறுங்கதை)

அப்பா வீட்டுக்குள் நுழையும் போது பையன் WWE பார்த்துக்கொண்டிருந்தான்.

அதை பார்த்ததும் அப்பாவுக்கு கோபம் வந்தது.

வேகமாய் போய் பையனை ஓங்கி அறைந்தார் "எத்தன தடவ சொல்றது படிக்கிற நேரத்துல டிவி பாக்காதன்னு".

அடித்ததும் பையன் வலி தாங்காமல் அழுதான்.

அழுது கொண்டே சொன்னான் "சின்ன பையன் கிட்ட போய் வீரத்த காட்டுறீங்க. அதோ டிவி-ல தெரியுற ஆளுங்க கிட்ட சண்டை போட்டு வீரத்த காட்டுங்கன்னு".

இந்த பதிலை கேட்டதும் மெதுவாய் டிவியை திரும்பி பார்த்தார்.

டிவியில் bulk -ஆன மனிதர்கள் சண்டை போட்டதை பார்த்ததும் "இவனுங்க கிட்ட போய் சண்ட போடணுமா... இவனுங்க என்ன அசால்டா முறிச்சி போட்டுடுவான்களே"என்று அப்பா மனசுக்குள்ளே நினைத்துக்கொண்டே அந்த டிவியை ஒரு பயத்துடனே பார்த்தார்...!!!

Wednesday, 6 April 2016

செருப்படி (சிறுகதை)

"அப்பா பாட்டி எங்க போறாங்க" என்று 6 வயதான குழந்தை சுரேஷ் தன் அப்பாவிடம் கேட்டான்..

"என் அண்ணன் வீட்டுக்குடா செல்லம்" என்று அப்பா சொன்னார்...

"ஏன் பா?" என்று சுரேஷ் கேட்டான்.

" நாங்க ரெண்டு பேருல அதனால நம்ம வீட்ல பாட்டி ஒரு மாசம் இருப்பாங்க என் அண்ணன் வீட்ல ஒரு மாசம் இருப்பாங்க டா கண்ணா".. என்று அப்பா சொன்னார்.

"ஓ அப்படியா. ஆனால் உங்களுக்கு நான் ஒரே பையனேச்சே என் கூட ஒரு மாசம் இருந்தீங்க இன்னொரு மாசம் எங்க போவீங்க நீங்க?" என்று அப்பாவியாய் கேட்டான் சுரேஷ் .

செருப்படி விழுந்தது அப்பாவுக்கு...!!!