"என்னங்க பண்றது. பையன் திடீர் திடீரென்று அழுவுறான். எத்தனை டாக்டரிடம் போய் பார்த்தாலும் எல்லாரும் சொல்லி வச்சப் போல எல்லாம் செக்கப்பும் பண்ணிட்டு ஒண்ணுமே இல்லைன்னு சொல்றாங்க.
என்ன தான் பண்றதுன்னு புரியவே மாட்டுதே." என்று கண் கலங்க ரம்யா தன் கணவன் மதிவாணனிடம் சொல்லி அழுதுக்கொண்டிருந்தாள்.
"அதையே தான் மா நானும் யோசிச்சிட்டு இருக்கேன். எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியலை. நம்ம வேலைக்காரி கிட்ட கேட்டாலும் அவளுக்கும் எதுவும் தெரியலை" என்று மதிவாணன் சொன்னான்.
மதிவாணனும் ரம்யாவும் ஒரு பிரபல நிறுவனத்தில் பொறியாளராய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவினேஷ் என்ற 31/2 வயது மகன் இருக்கிறான்.

மறுபடியும் அவினேஷின் அழுகை கேட்டது. இருவரும் ஓடி போய் பார்த்தார்கள்.
அவர்களை பார்த்ததும் சிறிது நேரம் அழுதுவிட்டு மறுபடியும் அழுகையை நிறுத்தினான்.
அவர்களை பார்த்ததும் சிறிது நேரம் அழுதுவிட்டு மறுபடியும் அழுகையை நிறுத்தினான்.
"என்னங்க பேசாம உங்க அம்மாவையும் அப்பாவையும் நடந்த பிரச்சனையை மறந்து விட்டு நம்ம கூட இருக்க சொல்லுங்களேன்" என்று மதிவாணனிடம் வேண்டுகோள் விடுத்தாள்.
"சரி" என்று ரம்யாவிடம் சொல்லிவிட்டு மதிவாணன் அவனுடைய பெற்றோரிடம் நடந்ததை சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்தான்.
அன்று தாத்தாவிடம் விட்டு விட்டு வேலைக்கு சென்ற இருவருக்கும் அங்கு வேலை ஒடவில்லை. இப்போ பையன் எப்படி இருக்குறானு தெரிந்துக்க ஏக்கம் வந்ததால் ரம்யாவும் மதிவாணனும் வேலையை அரைநாள் நாள் லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பினார்கள்.. அப்போது அவினேஷ் மிக சந்தோசமாய் தன் நண்பர்களுடனும் தன் தாத்தாவுடனும் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்த இவர்களுக்கு ஒரே ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி என்ன பையன் இவ்வளவு சந்தோசமாய் இருக்கானே என்று.
"டேய் குட்டி பையா. இங்க வாடா " என்று தாத்தா அவிநேஷை அழைத்தார்.
"என்ன தாத்தா" என்று ஓடி வந்தான்.
"எப்படி இருந்தது விளையாட்டு" என்று கேட்டார்.
"ஜாலியாய் இருந்துது தாத்தா. மறுபடியும் விளையாடலாமா" என்று கேட்டான்.
"வா நாம வேகமா போய் சாப்பிட்டு வந்து விளையாடலாம்". என்று சொல்லி வீட்டுக்கு அழைத்து சென்றார்.
பாட்டி சோற்றை பேரனுக்கு ஊட்ட தாத்தாவின் மடியில் அமர்ந்து கொண்டு அவினேஷ் சந்தோசமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
"டேய் குட்டி பையா. தாத்தாவுக்கு ஒரு சந்தேகம் டா" என்றார்.
"என்ன தாத்தா" என்றான்.
"இப்ப ஜாலியா விளையாடுற நீ அப்போவெல்லாம் எண்டா திடீர் திடீரென்று அழுதுன்னு இருந்த" என்று கேட்டார்.
திடிரென்று அவினேஷ் முகம் இறுக்கமாகவும் சோகமாகவும் மாறியது.
"என்ன பா" என்றார் தாத்தா.
"இல்ல தாத்தா. அம்மா அப்பா வீட்டுக்கு வந்தா டிவி தான் போட்டு பாப்பாங்க. அப்படி இல்லனா மடில சின்ன டிவி வச்சி (லேப்டாப்பை சொல்ல வர்றான்) ஏதோ பண்ணினு இருப்பங்க. இல்லைன்னா போன வச்சி யார் யார் கூடவோ பேசினு இருப்பாங்க.. ஏன் கூட அவ்வளவா பேசவே மாட்டாங்க.
வாமா வாபா விளையாடுலாம்னு கூப்டா பொம்மை கூட விளையாட சொல்லுவாங்க.
எனக்கு கஷ்டமா இருக்கும். ஒரு நாள் நான் ஒடும் போது கீழ விழுந்துட்டேனா அப்போ ஒ-னு அழ வேண்டியதா போச்சி அப்போ அம்மாவும் அப்பாவும் ஓடி வந்து என்ன தூக்கி அவங்க பக்கத்துல வச்சிகிட்டாங்க.
அப்போதான் எனக்கு புரிஞ்சுது அப்போ நான் சத்தம் போட்டு அழுதா தான் நம்ம பக்கத்துல இவங்க வருவாங்கனு.
அதான் அப்பா அம்மா கிட்ட எப்போலாம் கூட இருக்கணும்னு தோணுதோ அப்போலாம் அழுவேன். அவங்களும் ஓடி வருவாங்க. எனக்கு சந்தோசமா இருக்கும்" என்று தன் மழலை குரலில் அவினேஷ் சொல்லி முடிச்சான்.
இதை கேட்ட அவினேஷின் தத்தாவுக்கும் பாட்டிக்கும் கண்கள் கலங்கியே விட்டது.
மதிவாணனும் ரம்யாவும் இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கதவருகே நின்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்... அதை கேட்டதும் நம்ம பையனுக்குள்ள இவ்வளோ ஏக்கம் இருப்பதை நாம் உணராமல் விட்டு விட்டோமே என்று வருந்தி அவர்களுடைய இருவர் கண்ணிலிருந்து கணணீர் அருவி போல ஓட ஆரம்பித்தது...