Friday, 24 June 2016

அப்பா மார்பு (குறுங்கதை)

எப்பவுமே தன் அப்பா மார்பு மீது படுத்துறங்குவதை வழக்கமாக வச்சிருந்தாள் மகள். மகள் பிறந்து 9-ம் மாதம் தொடங்கி 1.5  வருடம் வரை அப்பாவின் மார்பு தான் அவளுடைய படுக்கையாக இருந்தது.

திடீரென அப்பாவிற்கு வெளிநாட்டு வேலை கிடைத்ததால் மகளை பிரிய முடியாமல் பிரிந்து சென்றார்...

இரண்டு வருடமாய் தொலைபேசியில் கூட அப்பாவிடம் மகள் பேசவில்லை. ஏன் என்று யாருக்கும் காரணம் புரியவில்லை. மகள் பேசாதது நரக வேதனையாக இருந்தது அப்பாவிற்கு.

இரண்டு வருடம் கழித்து வீட்டுக்கு திரும்பிய அப்பாவிற்கு பயம் அதிகமாக இருந்தது எங்கே நம் மகள் என்னை வெறுத்து இருப்பாளோ என்று..

என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் ஒரு வித அச்சத்துடன் வீட்டுக்குள் நுழைந்தார் அப்பா.

வீட்டுக்குள் சென்ற போது நள்ளிரவு நேராமானதால் நல்ல உறக்கத்தில் இருந்தாள் மகள். அப்பாவின் சட்டையை போட்டு அதன் மீது படுத்து இருந்தாள் மகள்.

அவள் அருகில் போய் படுத்தார் அப்பா.
 
மகள் தானாக  அப்பாவின் மார்பு மீது ஏறி படுத்துக்கொண்டு "வந்துட்டியா பா". என்று கேட்டுக்கொண்டே  அவளுடைய தூக்கத்தை தொடர்ந்தாள்.

அந்த வார்த்தையை கேட்டதும் அப்பாவின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் துளிகள்  வேகமாக வெளி வந்தது. இரண்டு வருட ஏக்கம் ஒரே நாளில் தீர்ந்தது....

2 comments:

Anonymous said...

Touching.

Anonymous said...

Super Super