Tuesday, 25 October 2016
Monday, 24 October 2016
Friday, 16 September 2016
துணைவி (சிறுகதை)
விமலாவின் வீட்டுக்கு சென்றதும் முதல் வேலையாய் அவளிடம் சொன்னாள் அக்கா. அவள் அதை கொஞ்சம் கூட பெரியதாய் எடுத்துக்கவில்லை. அது வேற ஏதாவது முக்கியமான காரணமாய் இருக்கும் நீ கவலை படாதேன்னு அக்காவிற்கே சமாதானம் சொன்னாள் விமலா.
அந்த பதிலை கேட்டு அக்கா கொதித்தாள் விமலாவை திட்டினாள். "உலகம் தெரியாமல் இருக்கியே. யாரையும் நம்பிடாதே வந்ததும் உன் புருஷன் கிட்ட கேளு" என்று சொன்னாள்.
ஆனாள் விமலாவோ "ஏதாவது முக்கியமா இருந்தா அவரே என் கிட்ட சொல்லுவாரு இல்லனா சொல்ல மாட்டாரு. அதை நான் கேட்டு அவர் மனச காயப்படுத்த விரும்பல" என்று சொன்னாள்.
அதனால் தங்கையின் கணவன் வரும்போதும் போகும்போதும் அவனை ஒரு மாதிரியாய் திட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தாள் அக்கா.
ஏன் இப்படி பேசுறாங்க என்று அவன் புரியாமல் விழித்தான். அதை அவன் தன் மனைவியிடம் கேட்டான். "தெரியலங்க" என்று சொல்லி சமாளித்தாள்... அந்த அளவுக்கு அவன் மீது பாசம் கலந்த நம்பிக்கை.
இப்பா நான் கொஞ்சம் கௌரவமான வாழ ஆரம்பிச்சிட்டேன்.. எல்லாம் அவரால தான் என்று சொல்லி முடித்தாள்".
அவளுடைய அக்கா வெட்கி தலை குனிந்தாள்.
Monday, 8 August 2016
பலூன் வியாபாரி (குறுங்கதை)
"என்ன பா இது அநியாயமா இருக்கே. 10 ரூபாக்கு கொடுப்பா" என்றான் கணேசன்.
"சார் இது எங்களுக்கே 15 ரூபாய்க்கு தான் சார் கிடைக்குது. இதுல நீங்க 10 ரூபாய்க்கு கேட்ட எப்படி சார் கொடுக்கறது" என்று பலூன் வியாபாரி சோகம் நிறைந்த குரலில் கேட்டான்.
வேறு வழியின்றி 17 ரூபாய்க்கு ஒத்துக்கொண்டான்.
17ரூபாய் கொடுத்து பலூன் வாங்கி தன் குழந்தையிடம் கொடுத்தான் கணேசன்.
"இந்த பலூன் உங்க குழந்தையின் சிரிப்புக்காக இனாம் சார்" என்று சொல்லி அந்த குழந்தையின் கையில் பலூனை கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்...
அந்த பலூன் வியாபாரியின் சொல் கணேசனுக்கு தலையில் ஓங்கி கொட்டியது போல் இருந்தது. அவமானத்தால் அவன் தலை பூமியை பார்த்தது.
Sunday, 7 August 2016
Saturday, 16 July 2016
என் மனைவியாக வந்து விடடி(பாடல் போன்ற கவிதை)
உன் மொத்த அழகையும் கண்கள் காட்டி கொடுத்து விட்டதே ...!!
என் உயிர் மொத்தமும் உன் கண்கள் அள்ளிக்கொண்டு செல்லுதே.
ஒரு போதும் நினைத்ததில்லை நானும் ..
என் பாதம் ஓடிச்செல்லுதே
பார்த்துப் பார்த்து செல்லுதே
தேடித்தேடி செல்லுதே...
திருடனாக ஆக்கி விட்டாயே....
பார்த்து பார்த்து இருந்தேனே
பரிதாபமாய் பறிகொடுத்தேனே
உன்னிடம் என் வாழ்வை
பரிதாபமாய் பறிகொடுத்தேனே
தொலைவிலிருந்து வதைத்தது போதும்....
என் கூடவே இருக்க வந்து விடடி....!!
Wednesday, 6 July 2016
மனைவியின் மேல் காதல் (குறுங்கதை)
சினிமாவிற்கு போக டிக்கட் எடுத்து கொண்டு வந்தான் கணவன்...
வழக்கம் போல மனைவி மேக்கப் போட்டு கலம்ப தாமதமாகியும் கோபப்படமால் அமைதி காத்தான்...
அவளை உட்கார சொல்லிவிட்டு பைக்கை எடுத்து கொண்டு வேகமாக திரையரங்கை நோக்கி சென்று கொண்டிருந்தான்..
அப்போது மழை வர ஆரம்பித்தது... எங்கே ஒதுங்கறது என்று தேடிக்கொண்டே வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.. மனைவி வேற நனையுறாளே என்று பக்கவாட்டு கண்ணாடி வழியாக அவளை பார்த்தான்...
அவள் முகத்தை வானத்தை நோக்கி வைத்து கொண்டு புன்னகையால் மழையை ரசித்துக் கொண்டிருந்தாள்....
அதை கணவன் பார்த்ததும் வண்டியின் வேகம் குறைந்தது .... மனைவியிடம் திரும்பி ஒரு மெல்லிய புன்னகை புரிந்தான்... இருவரும் மழையை ரசித்துக்கொண்டே சினிமாவிற்கு செல்லாமல் ஒரு சின்ன நீண்டதொரு பயணத்தை தொடர்ந்தார்கள்....
Friday, 24 June 2016
அப்பா மார்பு (குறுங்கதை)
எப்பவுமே தன் அப்பா மார்பு மீது படுத்துறங்குவதை வழக்கமாக வச்சிருந்தாள் மகள். மகள் பிறந்து 9-ம் மாதம் தொடங்கி 1.5 வருடம் வரை அப்பாவின் மார்பு தான் அவளுடைய படுக்கையாக இருந்தது.
திடீரென அப்பாவிற்கு வெளிநாட்டு வேலை கிடைத்ததால் மகளை பிரிய முடியாமல் பிரிந்து சென்றார்...
இரண்டு வருடமாய் தொலைபேசியில் கூட அப்பாவிடம் மகள் பேசவில்லை. ஏன் என்று யாருக்கும் காரணம் புரியவில்லை. மகள் பேசாதது நரக வேதனையாக இருந்தது அப்பாவிற்கு.
இரண்டு வருடம் கழித்து வீட்டுக்கு திரும்பிய அப்பாவிற்கு பயம் அதிகமாக இருந்தது எங்கே நம் மகள் என்னை வெறுத்து இருப்பாளோ என்று..
என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் ஒரு வித அச்சத்துடன் வீட்டுக்குள் நுழைந்தார் அப்பா.
வீட்டுக்குள் சென்ற போது நள்ளிரவு நேராமானதால் நல்ல உறக்கத்தில் இருந்தாள் மகள். அப்பாவின் சட்டையை போட்டு அதன் மீது படுத்து இருந்தாள் மகள்.
அவள் அருகில் போய் படுத்தார் அப்பா.
மகள் தானாக அப்பாவின் மார்பு மீது ஏறி படுத்துக்கொண்டு "வந்துட்டியா பா". என்று கேட்டுக்கொண்டே அவளுடைய தூக்கத்தை தொடர்ந்தாள்.
அந்த வார்த்தையை கேட்டதும் அப்பாவின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் துளிகள் வேகமாக வெளி வந்தது. இரண்டு வருட ஏக்கம் ஒரே நாளில் தீர்ந்தது....
Wednesday, 22 June 2016
Saturday, 18 June 2016
பெண்கள்(ளே) ஜாக்கிரதை (சிறுகதை)
பரணியின் வீட்டில் யாரும் இல்லாததால் மகாவை வீட்டிற்கு அழைத்தான். அவளும் அவன் மீது உள்ள காதலால் சரி என்று சம்மதித்து அவனுடன் வீட்டுக்கு சென்றாள்...
பரணி வீடு கோட்டை போல் இருந்ததை பார்த்து பிரம்மித்தாள்.
அவர்கள் வீட்டுக்குள் சென்ற நேரம் பார்த்து பரணியின் தொலைபேசி மணி அடிக்க "நீ வீட்ட சுத்தி பாரு மகா நான் பேசிட்டு வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்து பேசினான்.
"மச்சி மகா வீட்டுக்கு வந்துருக்குடா.. இன்னியோட இவள முடிச்சிட்டு கழட்டி விட்ருவேன்டா.
கொஞ்சம் பயந்த பொண்ணு தான் நடந்தத வெளில சொல்ல பயப்படுவா அது நமக்கு ஒரு அட்வான்டேஜ். எவ்வளவு அலைய விட்டா. நல்லா அனுபவிக்கட்டும்." என்று போனில் அவன் நண்பனிடம் பேசி சிரித்துக்கொண்டிருந்தான் பரணி.
இவனை காணோம் என்று தேடி வந்த மகா பரணி பேசுவதைக் கேட்டுவிட்டாள்.
உடனே வீட்டுக்குள் ஓடிப்போய் வாயை மூடிகொண்டு ஓ-வென்று கதறி அழுதாள். என்ன செய்வதென்று யோசித்தாள்.
அவன் வீட்டுக்குள் உள்ளே வந்ததும் புன்னகை புரிந்தாள். அதை பார்த்ததும் "ஆஹா உசார் ஆய்ட்டாடா" என்று கிட்ட நெருங்கி முத்தம் கொடுக்க முயற்சி செய்யும்போது அவள் அவனுடைய மர்ம உறுப்பில் எட்டி உதைத்தாள்.
உதைத்த மறுகனமே அவன் நிலைகுலைந்து கீழே சரிந்தான்.
கீழே விழுந்து "ஐயோ... ஐயோ.... வலிக்குதே..." என்று கத்தினான்.
இதுதான் தப்பிக்க சரியான சந்தர்ப்பம் என்று கருதி ஓடிப்போய் அவளுடைய பையை எடுத்துக்கொண்டு ஓடி கதவைத் திறக்கும் போது அவனை திரும்பி பார்த்தாள்.
அவன் வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் மனசு கேக்காமல் திரும்பி அவனிடம் வந்தாள்.
அவள் கை பையை பக்கத்தில் வைத்துவிட்டு "ஹே சாரிடா சாரிடா.. வலிக்குதா.. நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேனு தெரியுமா?" என்று சொல்லிக்கொண்டே அவன் தலையை தன் மடிமீது வைத்தாள் ..
"என்னடி இப்படி பண்ணிட்ட ரொம்ப வலிக்க்க்குதுடி" என்று அழுது கொண்டே மெதுவாய் கண்ணை திறந்து அவளை பார்த்து சொன்னான்.
அந்த நேரத்தில் அவள் கை பையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரே எடுத்து அவன் கண்ணில் அடித்தாள்.
அடித்துவிட்டு சொன்னாள் "அமைதியான பொண்ணுனா அடங்கி போற பொண்ணு இல்லடா அடக்கிட்டு போற பொண்ணுங்கடா.... நீ அழிக்க நினைக்கறது ஒரு பொண்ணோட கற்ப இல்லடா ஒரு குடும்பத்தோட வாழ்க்கைய. இன்னொரு பொண்ண தொட நினைக்கும்போது இதலாம் உனக்கு ஞாபகம் வரனும் டா".என்று சொல்லிவிட்டு அவளுடைய கை பையை ஸ்டைலாய் மாட்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
Friday, 3 June 2016
எடக்கு முடக்கு (குறுங்கதை)
Wednesday, 25 May 2016
சந்தோஷம் (குறுங்கதை)
வழக்கம் போல அந்த குண்டும் குழியுமுள்ள ரோட்டில் மகேஷ் திட்டிக்கொண்டே வண்டியை ஓட்டிகொண்டிருந்தான்.
அதே ரோட்டில் ஒருவர் அவரோட மகளை பைக்கில் கூட்டிக்கொண்டு வந்தார். குண்டும் குழியும் உள்ள ரோட்டால் அப்பாவின் முகம் ஒரே இறுக்கமாய் இருந்தது...!!
Monday, 23 May 2016
பொன்மொழிகள் (Quotes)
பார்த்துக்கொள் அது
உன்னை அழியாமல் பார்த்துக்கொள்ளும்..!
பயத்தை விட்டுதான் ஆகனும்...!!!
உனக்கு நல்லது நடக்கும் வரை தான் நீடிக்கும்.
4 மீண்டும் போராடி பார்க்க ஆசைபட்டால்
ஒரு புது வழியோடு தான் போகனும்....!!!
முதல் அடியை யோசிக்காமல் வையுங்கள்.
மீதியுள்ள தொலைவை தானாக கடந்துவிடுவீர்கள்...!!
உன் எதிர்மறை எண்ணங்களே உனக்கு எதிரி....!!!
Sunday, 22 May 2016
அவளை தேடுகிறேன்...!!(கவிதை)
அவளை நானும் தேடுகிறேன்.
அழகியை நானும் தேடுகிறேன்.
அவள் கூந்தல் ஓரத்தில் ஒட்டிகொண்டிருக்கும் பூப்போல ஆனேனே
ஒரு முறை என்னை பார்ப்பாளா என்று ஏங்கினேனே
அவள் விழியில் கோலமிட மை உதவியதே
அவள் வாழ்வினில் கோலமிட என் கை உதவுமே
அதை நானும் தெரிவிக்க துடிக்கிறேனே
அவள் மறுத்து விடுவாளோ என்று தயங்கினேனே..!!
Friday, 13 May 2016
ஓட்டு போடு (சிறுகதை)
"ஏன் இன்னும் இங்க இருக்க. ஊருக்கு போகலையா" என்று கேட்டார்.
மனோகர் பெருமையுடன் "இல்ல சார். செவ்வாய் கிழமை நமக்கு க்ளையன்ட் விசிட் இருக்குல. அதனால போக வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். அது மட்டும் இல்ல நான் ஒரு ஓட்டு போடாததால பெரிசா ஒன்னும் நடக்க போறது இல்ல" என்று சொன்னான்.
இப்படி பேசினால் மேனேஜர் பாரட்டுவார்னு எதிர் பார்த்தான். ஆனால் நடந்ததோ வேறு..
மேனேஜர் கோபத்துடன் "என்னையா லூசு போல பேசுற... படிச்ச நம்மலே இப்படி பண்ணா எப்படி. நான் போய் ஒரு வோட்டு போடாததால ஒன்னும் ஆகாதுன்னு சொல்றியே. உன்னலாம் என்ன சொல்றதுனே தெரியல. நீ போடுற ஒரு ஓட்டு ஒரு வேட்பாளர அங்கீகரிக்குது, எப்படினா நீ நல்லவன்.. இந்த நாட்டுக்கு நீ நல்லது செய்வேன்னு நான் நம்புறேன்னு . அது புரியாம இப்படி உலர்னு இருக்க".
அவர் இப்படி பேசுவார்னு அவன் எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் ஆடிப்போய் விட்டான்.
"உனக்கு என்ன இப்ப ஊருக்கு போறதுக்கு டிக்கெட் தானே வேணும். கொஞ்சம் பொறு"ன்னு சொல்லிட்டு சில ட்ராவல்ஸ்க்கு போன் பண்ணார். அதில் ஒரு ட்ராவல்ஸ்ஸில டிக்கெட் இருந்தது உடனே அதை புக் பண்ணி விட்டு டிக்கெட்டை மெயில் அனுப்ப சொன்னார். அந்த டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டுவந்து மனோகரிடம் நீட்டினார்.
"இந்தா டிக்கெட் நீ போய் ஓட்டு போடு. ஓட்டு போட்டு முடிச்சதும் க்ளையன்ட் விசிட்டுக்கு வர முடியுமானு பாரு. வர முடியுலனா ஒன்னும் ப்ராப்ளம் இல்ல நான் பார்த்துக்குறேன்." என்று டிக்கெட்டை கொடுத்து விட்டு வீட்டுக்கு கலம்பினார்.
அவன் ஆச்சரியத்தில் கண்கள் விலகாமல் அவர் நடந்து போவதையே பார்த்துக்கொண்டிருந்தான். தன்னை நினைத்து வெட்கப்பட்டான்... அதே நேரத்தில் தன் மேனேஜரை நினைத்து பெருமைபட்டான்.
Wednesday, 11 May 2016
Friday, 6 May 2016
பொம்மை (குறுங்கதை)
"ஆமா" என்று சொன்னாள் நிலா.
Monday, 2 May 2016
பயன் (குறுங்கதை)
Wednesday, 27 April 2016
நம்பிக்கை (சிறுகதை)
சோகமே அவன் வாழ்க்கையாய் ஆனதால் மிகுந்த விரக்தியோடு இருந்தான்....
எங்கே போறதுனே தெரியாமல் தெரு தெருவாய் திரிந்தான்..
அப்போது எதிரில் அவனுடைய பள்ளி ஆசிரியர் வந்தார்.. பாண்டியனை பார்த்ததும் அவரும் இவனை எளிதாய் அடையாளம் கண்டுகொண்டார்....
பாண்டியனை பார்த்ததும் இவன் ஏதோ சோகமாய் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டார் ஆசிரியர்.
"என்ன ஆச்சு பா ஏன் இவ்வளவு சோகமா இருக்க?" என்று கேட்டார் ஆசிரியர்.
"இல்ல சார் தொழில்ல எல்லாமே நஷ்டமாயிடிச்சு சார். இப்ப என் கிட்ட எதுவுமே இல்ல சார். எங்க போறதுன்னு தெரில என்ன பன்றதுனும் புரியல " என்று வருத்ததோடு புலம்பிக்கொண்டிருந்தான் பாண்டியன்.
அவன் சொன்னதை பொறுமையாய் கேட்டுக்கொண்டு அவன் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தார்.
அறைந்ததும் அவன் கண்ணிலிருந்து லேசான கண்ணீர் தானாய் வெளிவந்தது அதை துடைத்துக்கொண்டே "என்ன சார் அடிச்சிட்டீங்க?" என்று பதறியபடி கேட்டான்.
"உன் கிட்ட எதுவுமே இல்லன்னு சொன்ன?".
"அடி வாங்கனுதும் அழறதுக்கு உன் கண்ணு இருக்கு அத உடனே துடைக்க உன் கை இருக்கு. அப்புறம் வேற என்ன வேணும் உனக்கு.
காலு இல்லாதவன் நடக்கனும்னு நினைச்சா எவ்வளவு தூரம் வேணாலும் நடக்கலாம்.. ஆனா காலு இருந்தும் நம்பிக்கை இல்லேன்னா அவனால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. போடா போய் நம்பிக்கையோடு நட. இப்படி நடுதெருவில நடக்காத" என்று அவன் மண்டையில் உரைக்கும் படி சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் ஆசிரியர்...
அதை கேட்ட பிறகு தான் தெளிவு பிறந்தது அவனுக்கு.
வாத்தியார் அடித்தது அவன் கன்னத்தில் வலிக்கவில்லை இப்போது இதயத்தில் வலித்துக்கொண்டிருந்தது.
நம்பிக்கையோடு நடை போட ஆரம்பித்தான்.
Thursday, 21 April 2016
இதுதான் உலகம்....
நீ நல்லவனா இருந்தனா
கெட்டவனு சொல்லும்
கெட்டவனா இருந்தனா
நல்லவன்னு சொல்லும்
உன்ன விட சுமாரா வேலை
செய்றவனுக்கு தான்
எல்லாம் கொடுக்கும் ...!!
உனக்கு உதவாது
வயித்தெரிச்சல் படாம இருக்காது
உன்னை தான் கூப்டுவான்
ஒருத்தனும் இருக்க மாட்டான்...!!!
Tuesday, 19 April 2016
குட்டிக் கருத்து
கூட்டமா ஒரு பஸ் போகுதுனா பின்னாடியே
ஒரு பஸ் காலியா வரும்னு அர்த்தம்
அதே போல தான் நம் வாழ்க்கைல வர வாய்ப்பும்...!!!
நியூட்டனின் மூன்றாம் விதி..
குழந்தையையும் மனைவியையும்
திட்டி விட்டு ஆபிசுக்கு சென்றான்
அங்கே மேனேஜர் அவனை திட்டினார்..
நட்பின்அழகு..!!
போனில் ரமேஷ் "என்னடா வேணும்"
ராகேஷ் "உன் அன்பு டா "
ரமேஷ் "காசு எவ்வளோ டா வேணும்"...!!!
ராகேஷ் "1000"
ரமேஷ் "அனுப்புறேன்"
கோபம் ஆகாது...!!
"அவர்களை அடிச்சிட்டு வந்து என்ன அடி"
என்று இரண்டு குண்டர்களிடம்
மாட்டிவிட்டு பையன்
வீட்டுக்கு சென்று விட்டான்.
Sunday, 17 April 2016
கோபம் (குறுங்கதை)
டிவியில் bulk -ஆன மனிதர்கள் சண்டை போட்டதை பார்த்ததும் "இவனுங்க கிட்ட போய் சண்ட போடணுமா... இவனுங்க என்ன அசால்டா முறிச்சி போட்டுடுவான்களே"என்று அப்பா மனசுக்குள்ளே நினைத்துக்கொண்டே அந்த டிவியை ஒரு பயத்துடனே பார்த்தார்...!!!










































