Wednesday, 19 December 2018

தொடர்பில்லாத கவிதைகள் - மகள் என்ற வரம்

1) நீ பேசும்
பேச்சினை நாள் முழவதும் 
கேட்டுக்கொண்டிருக்கிறோம் 
ஆனால் சலிப்பே 
தட்டுவதில்லை 
காரணம் என்னவென்று 
நான் சொல்லி யாருக்கும் 
தெரிவதில்லை 
காரணம் நீயே 
என் வீட்டு தேவதையே ....!!!



2) நாள் முழவதும் 
தூங்குவதையே வேலையாய் 
செய்கின்றாய் 
சொற்ப நிமிடமே 
எழுகின்றாய் 
அதில பாதி நேரம் 
அழுகின்றாய் 
இரண்டே இரண்டு முறை 
சிரிக்கிறாய் 
அந்த சிரிப்பினால் 
நாள் முழுவதிற்கும் தேவையான 
அனைத்தையும் தந்துவிடுகிறாய்....!!


3) இவள் கண்விழிப்பதை
பார்ப்பதற்காக
வீட்டு வாசலில்
காத்து நிற்கும் சூரியனே 
நீ கொஞ்ச நேரம் 
பொறுக்கத்தான் வேண்டும் 
நீண்ட நேரம் 
எங்களை தூங்க விடாமல் 
விளையாடிட்டு விட்டு 
ஆழந்த உறக்கத்தில் 
தற்போது தான் உறங்குகிறாள் ...!

4) அவள்  கூந்தலை 
சேர துடிக்கும் பூக்களே 
நீங்கள் வெகு காலம் 
காத்திருக்க தான் வேண்டும் 
இந்த பிஞ்சி குழந்தைக்கு 
இன்னும் முடி வளரவில்லை 
என்பதை  நீங்கள் 
புரிந்து கொள்ளத்தான் வேண்டும்..!!!




5) சித்திரை சூரிய வெப்பமும்
தன்னை சிறைபிடித்து
குடைபிடிக்கும்
எங்கள் மகள்கள்
வெளியில் வரும்போது ....!!!!
அடங்க மறுக்கும்
அடங்கா புயல்களும்
தனக்கு அணை கட்டி
தென்றலாய் மாறும்
எங்களுடைய மகள்களை
தீண்டும்போது  ....!!!!
ஆரவாரத்தோடு
ஆர்ப்பரிக்கும் கடலும்
அடங்கிப்போய் நிற்கும்
எங்கள் தேவதைகளுடைய
பாதங்களை வருடும்போது ...!!!!

Saturday, 24 March 2018

நம்பிக்கையை விதை ...(சும்மா ஒரு தத்துவம்)

------------------------------------------------------------------
வீழ்வதே 
வாழ்வதற்க்கு தான்....!!!!
---------------------------------------------------------------------
திரும்ப திரும்ப 
பார்த்து ஒரு பெண்ணின் 
மனதை கறைப்பதை விட 
திரும்ப திரும்ப 
முயற்சி செய்து 
உன் இலட்ச்சியத்தை 
அடையலாம்...!!!
----------------------------------------------------------------------
ஆயிரம் படிக்கட்டை 
எப்படி ஏறுவதுனு யோசிப்பதை 
காட்டிலும் இந்த ஒரு படிக்கட்டு 
ஏறுனா போதும்னு யோசிச்சா 
ஆயிரம் படிக்கட்டை அசால்ட்டா ஏறலாம் ...!!!
----------------------------------------------------------------------
முயற்சி ஒன்றே 
உன்னை உன்னை வெற்றிப்பாதைக்கு 
கூட்டிச்செல்லும் 
மற்றவை எல்லாம் உன்னை 
துரத்தி செல்லும்..!!!!

----------------------------------------------------------------------

நம்பிக்கையை 
விதை 
உன்னிடத்தில் 
மற்றவை துளிர்க்கும் ....!!!


----------------------------------------------------------------------

Friday, 2 March 2018

நீ வாழும் வாழ்க்கை (சிறுகதை)

என் புள்ளைங்க கஷ்டப்பட கூடாதுனு
அவுங்க கூட சந்தோசமா உட்கார்ந்து பேசணும்னு 
அவங்க கூட ஜாலியா விளையாடணும்னு
அவங்க கூட நிம்மதியா இருக்கணும்னு
நிம்மதி இல்லாம தூக்கம் இல்லாம
சோறு இல்லாம சொந்தம் இல்லாம 
கஷ்டப்பட்டு உழைக்க ஆரம்பிச்சேன் 
இப்போ என்னடானா அதுங்க பெருசா வளர்ந்து 
அவங்களோட நண்பர்கள் கூடத்தான் 
விளையாடுவேன்னு கிளம்பி போயிடிச்சிங்க

பசங்க கூடத்தான் நேரத்தை செலவு பண்ணாம 
புத்தி கேட்டு அலைஞ்சு
 (அவங்களுக்கா தான் கஷ்டப்பட்டேன். இருந்தாலும் நேரத்த ஒதுக்காம விட்டுடேன்ல )  ஓவரா ஆடிட்டேன்...

சரி பசங்க கூட தான் விளையாட முடியாம போயிடிச்சு
பேர பசங்க கூடவாவது  சந்தோசமா விளையாடுலாம்னு 
நெனைச்சி பொண்ணுக்காகவும் மாப்பிள்ளைக்காகவும் 
அலைஞ்சு திரிஞ்சு நல்ல துணையை தேடி பிடிச்சி 
சேர்த்து வச்ச காசாலாம் போட்டு  பசங்களுக்கு
கல்யாணம் பண்ணி  வச்சா ஒரே மாசத்துல
புடிக்கல டிவோர்ஸ் பண்ணிவிடுங்கனு வந்து
நிக்குதுங்க.


அப்புறம் ரெண்டு பேரையும் நிக்க வச்சி என்ன
காரணம்னு விசாரிச்சா நான் இருக்கறது
புடிக்கலைனு சொல்லுதுங்க. சரி என்ன எங்க
அனுப்ப போறாங்கன்னு யோசிக்குறதுக்குள்ள
அவங்களே ஒரு நல்ல முதியோர் இல்லமா
பார்த்துட்டு வந்துட்டாங்களா. இப்போ கிளமபினா
நைட்டுக்குள்ள அங்க போய்டலாமான்னு சொல்லுதுங்க.

அப்படினா என்ன அர்த்தம்னா உடனே பார்த்துடுற
போல இருந்துட கூடாதுனு தூரமா அனுப்பி
வைக்கிறாங்க. சரி கிளம்புவோம்னு சொல்லிட்டு
அங்கிருந்து கிளம்பி இப்போ முதியோர் இல்லத்துல
சோறுக்காக வெயிட் பண்றேன்.


இது உங்களோட வாழ்க்கை கொஞ்சம் பார்த்து சூதானமா நடந்துக்குங்க.!!

Tuesday, 20 February 2018

IT ஊழியரை பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள் - 1


1. ஐ.டி ஊழியர்களுக்கு வேலை நேரம் என்பதே கிடையாது. ராணுவத்தினர் போல எந்நேரமும் தயாராக இருக்கனும்.

2. எப்போது வேலை போகும் என்று தெரியாது ஆனால் கேட்டால் நிரந்தர வேலை என்று சொல்வார்கள்.

3. மற்றவர்களை வேலையிலிருந்து நீக்கினால் தான் அங்கு சிலருக்கு வேலை இருக்கும்...

4. ஒவ்வொரு லீவு எடுக்கறதுக்கு நெறைய பேர் கிட்ட கெஞ்ச வேண்டியதா இருக்கும்.

5. கடுமையாய் உழைப்பவனுக்கு மரியாதை மட்டும் தான் கொடுப்பார்கள். வேற எதுவும் கொடுக்க மாட்டார்கள்.

6. வெளிநாட்டுக்கு அனுப்புறோம்னு சொல்லியே மொத்த ரத்தத்தையும் உறிஞ்சு விடுவாங்க.

7. 10000 சம்பாதிக்குறவன் கூட மாச கடைசில 500 வச்சிருப்பான். ஆனால் ஒரு லட்சம் சம்பாதிச்சாலும் 10ம் தேதி தொடரதுக்கு முன்னாடியே 10பைசா இல்லாம அலைவாங்க.

8. 3000 வாடகை வீட்டை ஐ.டில வேலை செய்றாங்கன்னு தெரிஞ்சதும் அப்படியே 10 மடங்கு ரேட் ஏத்தி சொல்லுவாங்க.

8.1 டாக்டர் கிட்ட போனா தேவை இல்லாத டெஸ்ட் மட்டும் 300 எழுதுவார்.
8.2 போலீஸ்ல மாட்டுனா 100 பைன் க்கு 1000 கேப்பாரு.

9. கடனை தவிர வேற எதுவும் அவன் கிட்ட இருக்காது.

10. ஐ.டில வேலை செய்யுறியே கை நிறைய சம்பாதிப்பானு யார் சொன்னாலும் இவங்களுக்கு கோபம் பத்திகிட்டு வந்துடும்.


சின்ன சிந்தனை


நான் பிடிச்சிக்கிறேன் 
எழுந்திரு என்று சொல்வதை விட 
உன்னால் முடியும் 
எழுந்திரு 
என்று சொல்...!!!

நீ சாப்பிடாமல் 
சாப்பிட மாட்டாள் 
அவள் சாப்பிடாமல் 
நீ சாப்பிட்டால் 
சாப்பிடவே மாட்டாள்...!!!
-------------- மனைவி-----------

குழந்தைகளின் செயல்களை 
அருகில் இருந்து 
பார்க்கும் வரம் கிடைத்தால் 
நீ முற்காலத்தில் 
புண்ணியம் செய்திருப்பாய்..!!





அடுத்தவன் பேஸ்புக்ல மேரேஜ் பண்ணி நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேனு ஸ்டேடஸ் போட்டா அப்படிலாம் இருக்க சேன்ஸ் கிடையாதே.. ஒரு வேல அவன் பொண்டாட்டி அப்படி போட சொல்லி மிரட்டி இருக்குமோனு சந்தேகப்பட தோனுது...!!!