"யப்பாடா ஒரு வழியா இந்த பெரிய பிரச்சனையை (emergency fix) முடிச்சாச்சு. நாளைக்கு நம்ம கோட (code) டெலிவரி கொடுத்துடலாம் " என்று சொல்லிக்கொண்டே தலையிலிருந்த முடியை இரு கைகளாலும் கோதிக்கொண்டு பெரு மூச்சி விட்டான் ஜவஹர்.
அப்போது தான் அவன் கண்களுக்கு கணினியின் ஓரத்தில் உள்ள மணியை பார்க்க நேரம் கிடைத்தது. பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி மணி நள்ளிரவு 12 ஆக இருந்தது.
"ஐயயோ! டைம் 12 ஆய்டிச்சே இன்னும் நம்ம டின்னர் கூட சாப்டுலையே" என்று பதறியபடி பைக் சாவியை எடுத்துக்கொண்டு ரூமுக்கு செல்ல தயாரானான்.
ஜவஹருடைய சொந்த ஊர் சேலம். அவன் போரூரில் நண்பர்களோடு ரூம் எடுத்து தங்கிக்கொண்டு கிண்டியில் உள்ள ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் கணிப்பொறியாளனாக வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனுடன் தங்கி இருக்கும் 3 நண்பர்களும் வெவ்வேறு கம்பெனியில் கணிப்பொறியாளராக வேலை செய்து வருகின்றார்கள்.
போகும் வழியில் எதாவது கடை இருந்தால் நிறுத்தி சாப்ட்டுக்கலாம் என்று முடிவெடுத்து வண்டியை வேகமாய் எடுத்துக்கொண்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினான். ஏனெனில் இந்த நேரத்தில் அலுவலகத்தில் சாப்பிட எதுவும் கிடைக்காது என்று அவனுக்கு தெரியும்.
போகும் வழியில் உள்ள கடைகளை நோட்டம் விட்டுக்கொண்டே சென்றான். ஆனால் அவனது துரதிர்ஷ்டம் அனைத்து கடைகளும் மூடி இருந்தது. சில கடைகளில் சமையல் செய்த பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார்கள்.
சாப்பிட எதுவும் கிடைக்காது என்று தெரிந்ததும் அவனுடைய வயிற்றுக்கு பசி அதிகம் எடுக்க ஆரம்பித்தது .
30 நிமிடத்தில் ரூமை அடைந்தான்.
ரூமுக்கு சென்றவன் நேராக குளிர் சாதன பெட்டியை திறந்து ஏதாவது பழம் இருக்குமா இல்லை வேற எங்கவாவது பிஸ்கட் பிரட் இருக்குமா என்று தேடினான். தேடிப்பார்த்து ஒரு பயனும் இல்லை. பேச்சுலர் ரூம் என்பதால் ரூமில் சாப்பிட எதுவும் இல்லை.
அவனுடைய நண்பர்கள் அனைவரும் நைட் ஸிப்ட்க்கு வேறு சென்றுவிட்டார்கள்.
இவனுக்கு பசி மேலும் மேலும்அதிகமாய் கொண்டே இருந்தது...
ரூமுக்கு சென்றவன் உடைகளை மாற்றிக்கொண்டு மீண்டும் உணவு வேட்டைக்கு பைக் எடுத்துக்கொண்டு கலம்பினான்.
பைக் எடுத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கும்போது ரோட்டின் ஓரமாய் ஒரு விளக்கு எரிவதை கண்டான். அநேகமாய் அது உணவு கடையாய் தான் இருக்கும் என்று முடிவு செய்து அதன் அருகில் தன் வண்டியை செலுத்தினான். அவன் செய்த அதிர்ஷ்டமோ என்னவவோ அது உணவு கடை தான்.
அங்கே ஒரு பெண்மணி தள்ளு வண்டியில் தோசையையும் இட்லியும் சுட்டு விற்றுக்கொண்டிருப்பது போல தெரிந்தது. ஆனால் கடையில் யாருமில்லை. ஒருவேளை இங்கேயும் எதுவும் கிடைக்கலனா இன்னைக்கு நான் அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டே கடையின் அருகே நெருங்கினான்
"என்ன வேணும் பா " என்று அந்த பெண்மணி கேட்டாள்.
"ஏதாவது சாப்ட இருக்குமா" என்று கேட்டான் ஜவஹர்.
"இட்லி தோசை இருக்கு பா " என்றாள்.
இவனுக்கு ஒரே ஆனந்தம்.
"அம்மா 4 இட்லி வச்சி கொடுங்கமா" என்று சொன்னான்.
இட்லி தட்டில் வச்சி கொடுத்தும் அதை வேக வேகமாய் உண்ண ஆரம்பித்தான்.
"முட்டை தோச ஏதாவது வேணுமா பா " என்று கேட்டாள் அந்த பெண்மணி.
நட்ட நாடு இராத்திரியில் சூடான தோசையை நினைச்சு பாருங்கள். அதுவும் முட்டை தோசை.
"சூப்பர் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே. 2 முட்டை தோச போடுங்கம்மா" என்று மகிழ்ச்சி பொங்க சொன்னான்.
ஒவ்வொரு முட்டை தோசையை அவள் சூடாய் சுட்டு கொடுக்க இவன் அழகாய் தின்று முடித்தான். வயிறு முழுவதும் அவனுக்கு நிறைந்தது.
அப்பொழுது தான் அவனுக்கு பளிச்சென்று கண்ணே தெரிய ஆரம்பித்தது.
கையை கழுவிக்கொண்டு பில் எவ்வளவு மா என்று கேட்டான்.
"50 ரூபா" என்றாள்.
"பசியே இல்லாமல் 500,1000 ரூபாய்க்கு கம்பனி ட்ரீட் என்ற பெயரில் அழித்தது அந்த நேரத்தில் அவனுக்கு ஏன் ஞாபகம் வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை."
"இந்த மகராசி நல்லா இருக்கணும்னு " என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே பர்சை எடுக்க பேன்ட் பையில் கையை விட்ட அவனுக்கு இன்னொரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அவனது பேன்ட் பையில் பர்ஸ் இல்லை எங்க போனது என்று யோசித்தவனுக்கு ஞாபகம் வந்தது வீட்டுக்கு வந்து உடைகளை மாற்றும் போது பழைய பேன்ட் பையில் இருந்து பர்சை எடுக்க மறந்து விட்டான்.
பசி கொடுமை அதிகமாய் இருந்ததால் அவனுக்கு சோறு தவிர வேற எதுவும் அந்த நேரத்தில் ஞாபகம் வரவில்லை.
"வேற எங்கவாவது வைத்திருக்கோமா என்று 2 பாக்கெட் இருக்குர அரைக்கால் பேண்டில் 200 முறை தேடிவிட்டான்." எதுவுமே இல்லை.
அவன் தேடலை பார்த்துக்கொண்டிருந்த பெண்மணி "என்ன ஆச்சி பா " என்று கேட்டாள்.
"ஒன்னும் இல்ல மா வர அவசரத்தில் பர்சை எடுத்துக்கொண்டு வர மறந்து விட்டேன். நீங்க கொஞ்ச நேரம் கொடுத்தீங்கனா நான் போய் எடுத்துக்கொண்டு வந்துடுறேன் " என்று ரொம்பவும் மிகவும் தயங்கி கொண்டே சொன்னான்.
அதற்கு அந்த பெண்மணி "பரவாயில்லை பா நீ நாளைக்கு வந்து கொடு. மணி ஏற்கனவே 1மணி ஆக போகுது. " என்று சொன்னாள்.
இந்த பதிலை அவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை. அதை கேட்டதும் ஆச்சரியத்தின் உச்சிக்கே போனான்.
"ரொம்ப நன்றி மா " என்று கொஞ்சம் தூரம் வண்டியை எடுக்க நடந்தவன் ஏதோ யோசித்தவனாய் திரும்ப வந்தான்.
"அம்மா கேக்குரனேனு தப்பா நினைச்சிக்காதீங்க.. நான் இந்த கடைக்கு வருவது இதான் முதல் முறை. அப்புறம் எந்த நம்பிக்கைலமா நாளைக்கு வந்து காசு கொடுங்கன்னு சொல்றீங்க."
அதற்கு அவள் புன்னகைத்துக்கொண்டே "தம்பி! இரவு 12 மணிக்கு மேல ஒருத்தன் சாப்ட வரானா அவன் ஏமாத்தணும்னு வர மாட்டான். உணமையிலேயே பசியோட தான் வருவான். அப்படி வரவங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கும் அவங்களால பணத்த சாப்பிட முடியாதுனு.
பசியில பணம் மறந்து போகுறது ஒரு இயல்பான விஷயம் தான் பா. எனக்கு இது நல்லாவே தெரியும். " என்று சொன்னாள்.
அந்த பெண்மணியை பார்த்து கை எடுத்து கும்பிட்டு மறுபடியும் நன்றி சொல்லிவிட்டு வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அந்த பெண்மணியின் அந்த வார்த்தைகள் அவனுக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்க்கை பாடங்களை கற்று கொடுத்தது.