Monday, 15 February 2016

உயிர் கொடுத்த குழந்தை (சிறுகதை)

"நம்ம இரண்டு பேரோட உயிர கொடுத்தாவது நம்மளோட பிள்ளைய காப்பத்தனுங்க. சரியா" என்று கணவன் மருதனிடம் கேட்கிறாள் காமாட்சி.

"அதுக்கு தான் மா நம்மள இந்த ஆண்டவன் அனுப்பிருக்கான்" என்று சொல்லிக்கொண்டே மனைவியின் கன்னத்தை செல்லாமை கிள்ளுகிறான்.

"நம்ம குழந்தை என்ன எப்போ அம்மான்னு கூப்பிடும்னு மனசு ஏங்குதுங்க. அப்படி கூப்பிட்டா நான் பிணமா இருந்தா கூட எழுந்துடுவேன்" என்று சொல்கிறாள் காமாட்சி.

அந்த நேரத்தில் வயிற்றில் குழந்தை லேசாய் எட்டி உதைத்து தன் சந்தோசத்தை வெளிபடுத்தியது.

"என்னங்க பாருங்க வயித்துல உங்க குழந்தை ஓவரா துள்ளுது. கொஞ்சம் கண்டிச்சி வையுங்க" என்ற செல்லமாய் சிணுங்கி கொண்டேசொன்னாள் காமாட்சி...

அவன் மெல்லிய புன்னகை புரிந்து அவளுடைய வயிற்றில் அழகிய முத்தம் ஒன்றை கொடுத்தான்.

4 வருடத்திற்கு பிறகு மனைவி கர்ப்பமானதால் அவளை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்கிறான் மருதன்.

ஒரு சிறு வேலை கூட வாங்காமல் அனைத்தையும் இவனே இழுத்து போட்டு செய்கிறான்.

காலையில் வீட்டை பெருக்கி கோலம்போடுவது முதல் இரவு சாப்பிட்ட தட்டை கழுவி வைப்பது வரை அனைத்து வேலையும் இவன் மட்டுமே செய்கிறான். மனைவிக்கு உட்கார்ந்த இடத்திலே அனைத்தும் வந்து சேர்ந்து விடுகிறது.

பாசத்தால் செய்தது விபரிதத்தில் கொண்டு போய் விடும் என்பதை அவன் உணரவில்லை.

காமாட்சிக்கு பிரசவ வலி வந்ததால் உடனே ஆட்டோவை பிடித்து மருத்துவமனைக்கு மனைவியை அழைத்து சென்றான்.

அவள் வலியால் துடிதுடித்து கத்திக்கொண்டிருந்தாள். அதை பார்த்த அவனுக்கும் கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

"ஒன்னும் இல்ல மா கொஞ்சம் பொறுத்துக்கோ பொறுத்துக்கோ" என்று மனைவியை சமதானப்படுத்திக்கொண்டே இருந்தான்.

பிரசவம் பார்க்கும் அறைக்கு மனைவியை அழைத்து சென்றார்கள்.

அங்கு டாக்டர் அவன் மனைவியை பரிசோதித்து விட்டு "பிரசவம் ரொம்ப சிக்கலாகவும் கடினமாகவும் இருக்கு. குழந்தை கொடி சுத்தியும் தலை திரும்பாமலும் இருக்கு" அதனால ஏதாவது ஒரு உயிர தான் காப்பாத்த முடியும் என்று மருதனிடம் சொல்கிறார் டாக்டர்..

அதை கேட்டதும் அவன் கதறி அழுகிறான். டாக்டர் எப்படியாவது இரண்டு உயிர்களையும் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறான்.

"முயற்சி செய்கிறோம் ஆனால் அதற்கு வாய்ப்பு இருப்பதை தெரியவில்லை" என்று சொல்கிறார் டாக்டர்...

மருத்துவமனை பணியாளர்கள் காட்டும் அத்தனை இடத்திலும் மருதன் கை எழுத்து போட்டு கொடுத்ததும் டாக்டர் அறுவை சிகிச்சை செய்ய உள்ளே செல்கிறார்.

குழந்தையை வெளியே எடுக்க வயிற்றை அறுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார் டாக்டர்.

குழந்தை வெளியே வர வர அம்மாவின் இருதய துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது.

குழந்தை மொத்தமாய் வெளியே வருவதற்குள் அம்மாவின் இதய துடிப்பு மொத்தமாய் அடங்கி விடுகிறது.

"குவா..... குவா" என்று அழுந்து கொண்டே குழந்தை வெளியே வருகிறது.

குழந்தையை கழுவிய பின் மருதனுக்கு ஆண் குழந்தையை வெளியே எடுத்து கொண்டு வந்து காண்பிக்கிறார்கள். உங்கள் மனைவி இறந்து விட்டார்கள் என்பதையும் அவனிடம் அறிவிக்கிறார்கள்.

அவன் அதை கேட்டு மனமுடையவில்லை. இந்த குழந்தையை என் மனைவி அருகில் சிறிது நேரம் படுக்க வையுங்கள் என்று சொல்கிறான். ஏன் இப்படி சொல்கிறான் என்று அவர்களுக்கு புரியவில்லை இருந்தாலும் அவன் சொன்னதை போலவே அவர்களும் செய்கிறார்கள்.

குழந்தை அம்மா அருகே படுத்துக்கொண்டு அமைதியாய் விளையாடிக்கொண்டிருந்தது. அம்மாவை எட்டி உதைத்தும் கையால் தடவியும் ஏதோ செய்து கொண்டிருந்தது ஒரு வேலை அம்மா இறந்தது தெரிந்து குழந்தை அம்மாவை எழுப்பவதை போல இருந்தது. சுற்றி இருந்த டாக்டருக்கும் மற்ற பணியாளரும் அந்த நெகிழ்ச்சியான நிகழ்வை கண்ணில் பார்க்கும்போது யாராலையும் அவர்களுடைய கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

காமாட்சியின் உடலை கொண்டு போகவும் ஸ்ட்ரெச்சர் வந்தது. குழந்தையை அம்மாவிடமிருந்து தூக்கிட்டு போக நர்ஸ் அருகே சென்றாள். தூக்க 1 வினாடி இருக்கும்போது குழந்தை அம்...மா ...... அம்.........மா. அம்.........மா என்று அழ ஆரம்பித்தது.

அதை கேட்டவுடன் காமாட்சியின் உடலிடம் லேசாய் அதிர்வுகள் தெரிய ஆரம்பித்தது. "டாக்டர் இங்க பாருங்க" என்று நர்ஸ் அழைத்தாள். சட்டென்று இதயம் துடிக்க ஆரம்பித்தது.  டாக்டரால் நம்ப முடியவில்லை இங்கே என்ன நடக்குறதென்றே ... பிறந்த குழந்தையால் எப்படி அம்மாவென்று சொல்ல முடியும் இறந்த அம்மாவின் உடம்பில் எப்படி அசைவு தெரிகிறதென்று என்று அவருக்குள் கேள்வி கேட்டும் அந்த ஆச்சரியத்தை சுற்றி இருந்த பணியாளர்களிடமும் கேட்டு வெளிபடுத்தினார் .

உடனே நாடித்துடிப்பை சோதித்தார். சீராக ஆரம்பிப்பது போல இருந்தது.. குழந்தை அம்...மா ...... அம்.........மா. அம்.........மா என்று நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தது.

அந்த குரல் காமாட்சியின்  உடல் நிலையை சீராக்கி கொண்டே இருந்தது. டாக்டரும் பணியாளர்களும் கண்ணில் காண்கின்ற காட்சி உண்மையா என்று சோதித்துக்கொள்ள அவர்களை அவர்களே கிள்ளிக்கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் கண்களை திறந்து "என் குழந்தை எங்கே" என்று கேட்டாள் காமாட்சி.

லேசாய் ஆச்சரியம் கலந்த பயத்துடன் அவளுடைய அருகில் இருந்த குழந்தையை எடுத்து அவளிடம் கொடுத்தாள் நர்ஸ்.

குழந்தையை ஆர்வத்தோடு வாங்கி ஆனந்த கண்ணீரோடு முத்தத்தை வாரி கொடுக்கிறாள் காமாட்சி. முத்தத்தை கொடுத்த மறு வினாடியே அழுது கொண்டிருந்த குழந்தை சிரிக்க ஆரம்பித்தது . பணியாளர்கள் ஆனந்த கண்ணீரோடு சிரித்துக்கொண்டே வெளியே வந்து மருதனிடம் நடந்ததை தெரிவிக்கிறார்கள்.

மருதன் உள்ளே ஓடிப்போய் மனைவியையும் குழந்தையும் பார்த்து அழுகிறான். எனக்கு தெரியும் நம்ம குழந்தை உன்னை காப்பாத்திடும்னு அதனால தான் நம்ம குழந்தைய உன் பக்கத்துல படுக்க வைக்க சொன்னேன் என் நம்பிக்கை வீண் போகவில்லை நன்றி கடவுளே என்றுச் சத்தம் போட்டு அழுது கொண்டே சிரிக்குறான்.

அந்த ஒரு உயிரில் தான் 2 உயிரும் இருந்திருக்கிறது என்று டாக்டருக்கு அப்பொழுது தான் புரிந்தது... அவர்களை தனியே விட்டு விட்டு சிரிப்போடு சேர்ந்த கண்ணீர் துளியோடு அவரும் அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.


2 comments:

pups said...

superbbbbbbbbb

Anonymous said...

Azhagu…
Nandru….