Wednesday, 11 December 2019

அழகான நினைவு!

வயல் வெளியில் விரல்
பிடித்து நடை பழகி
நாம் சந்தோசமாய்
இருந்த இடத்தில்
வான் வந்து மண்ணை
போட நினைத்து
மழையை பொழிய

நாம் மழையை
பார்த்ததும் ஓடி ஒளியாமல்
ஆடி பாடி மழையில் நனைந்து
வான் தலையில்
மண்ணை வாரி நாம்
போட்டு விளையாட்டை
தொடர்ந்தோமே !!!!

Monday, 11 February 2019

தொலைந்த அன்பு ( குறுங்கதை )

அன்றைக்கு பந்த் காரணமாக முரளிக்கு எங்கேயும் சாப்பாடு கிடைக்கவில்லை. தெருத்தெருவாய் அலைந்தும் திரிந்தும் பார்த்து விட்டான். திறந்திருக்கும் ஒரு ஹோட்டலோ கடையோ அவன் கண்ணில் தென்படவில்லை.

முரளிக்கு பசியில் மயக்கம் வர நிலைக்கு சென்றான். சாயங்கால நேரத்தில் தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. யாரோ ஒரு பெண்மனி தன் மகன் தொலைந்த காரணத்தால் யார் அவளுடைய வீட்டுக்கு வந்தாலும் சாப்பாடு போடுகிறாள் என்று.

இன்னைக்கு பந்த் வேற சாப்பாடு கிடைக்குமா என்ற சந்தேகத்தோடு அவளுடைய வீட்டை நெருங்கினான்.
    
அந்த பெண்மனி அவனை பார்த்ததும் அவனுடைய பசியை உணர்ந்து விட்டாள். அவனை வீட்டுக்குள் அழைத்து உணவு பரிமாறினாள்.

அந்த நேரத்தில் அவளுடைய அண்ணன் வந்தார். அவளை வெளியே வர சொல்லி திட்ட ஆரம்பித்தார் "இன்னும் திருந்தலயா நீ எத்தன வருஷத்துக்கு தான் இப்படி வரவன்  போரவனுக்குளாம் சமைச்சி போடுவ. இப்படி சமைச்சி போட்டா உன் பையன் வந்துடுவானு நினைக்கிறியா.? ஏன் இப்படி பன்ற. ?" என்று கேட்டான்.

அதற்க்கு அந்த பெண்மணி கண்ணீருடன் "நான் இங்க இவங்களுக்கலாம் சோறு போட்டா அங்க என் பையனுக்கு யாரு-னா சோறு போடு வாங்கல அதான் இப்படி செய்யறேன்ணா". என்று லேசான கண்ணீர் துளிகளோடு சொன்னாள்.

இதையெல்லாம் உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த முரளிக்கும் கண்ணீர் துளி வந்தது.