Tuesday, 22 March 2016

அப்பா (சிறுகதை)

"அப்பா கிட்ட நம்ம காதல பத்தி பேசிட்டேன் டா என் வீட்டு பக்கத்துல இருக்குற பார்க்குக்கு வரியா அங்க உன் கிட்ட கொஞ்சம் பேசணும். வரும் போது மறக்காம உன் உயிர் நண்பன்னு ஒருத்தன பத்தி அடிக்கடி சொல்லுவியே அவனையும் கூட்டிட்டு வா டா".. என்று தியாகுவிடம் போனில் சொன்னாள் உமா.

"எதுக்கு டி அவன்" என்று கேட்டான் தியாகு .


"நீ கூட்டிட்டு வாயேன் நான் சொல்றேன் "என்றாள் உமா.

தியாகு தன நண்பன் வேலவனை கூட்டிடுக்கொண்டு பார்க்குக்கு விரைந்தான்...

அவர்களுக்காக பார்க்கில் உமா காத்துக்கொண்டிருந்தாள்.

"சரி டி இப்ப சொல்லு உங்க அப்பா என்ன சொன்னாரு?. சம்மதிச்சிட்டாரா?. என்னை பார்க்கனும்னு சொன்னாரா?" என்று கேள்விக்களை அடுக்கினான்.

லேசா விழுங்கி கொண்டு பேசினாள் "இல்ல டா.. அது வந்து அவரு உன் நண்பன பார்க்கனும்னு சொன்னாரு" என்றாள் உமா.

ஆச்சரியத்தில் இருவரின் (வேலவன் மற்றும் தியாகு ) விழிகளும் பெரியாதாயின.

"என்னடி சொல்ற என்னை பார்க்குறதுல ஒரு அர்த்தம் இருக்கு. இவன எதுக்கு பார்க்கனும்னு சொல்றாரு" என்று புரியாமல்கேட்டான்...

"எனக்கு என்ன தெரியும். உன் நண்பன பார்க்கனுமா அவன் கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாரு. சரியான லூசா இருப்பாருன்னு நினைக்குறேனு" என்று தன் அப்பாவை திட்டிக்கொண்டே சொன்னாள்.

"இப்போ அவரு உன் நண்பனுக்காக தான் வீட்ல காத்துக்கொண்டிருக்கார்னு" சொன்னாள்.

"சரி மச்சி... நீ போய் பேசிட்டு வாடா" என்றான் தியாகு.

"நீ அவர் கிட்ட பேச போகும்போது போன் பண்ணி உன் பாக்கெட்ல வச்சிக்கோ மச்சி. நாங்க ரெண்டு பெரும் இங்கிருந்தே கேக்குறோம்" என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

வேலவனும் "என்னடா இது காமிடியா இருக்கு" என்று சிரித்தான்.
"சரி போய் பேசிட்டு வரேன்" என்று லேசாய் திமிராய் சொல்லி உமாவுடைய வீட்டுக்கு விரைந்தான்.

உமா வீட்டுக்கு போய் காலிங் பெல்லை அழுத்தினான். உமாவுடைய அப்பா கதவை திறந்தார்.

நான் தான் தியாகுவின் நண்பன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.

வேலவனை வீட்டுக்குள் அழைத்து காபி கொடுத்து உபசரித்தார் உமாவின் அப்பா. வேலவன் வீட்டுக்குள் நுழையும் போதே தியாகுவிற்கு போன் பண்ணி விட்டான்.

சிறிது நேரத்திற்கு பிறகு பேச்சை தொடர்ந்தார் உமா அப்பா.

பார்க்கிலிருந்து தியாகுவும் உமாவும் ஹெட்செட்டில் இவர்கள் என்ன பேசிக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்தார்கள்.

வேலவனை பற்றி சிறிது பேசிவிட்டு " உங்கள் நண்பரை பற்றி சொல்லுங்களேன்" என்று சொன்னார் உமா அப்பா.

"நாங்க ரெண்டு பெரும் சின்ன வயசுலருந்து ஸ்கூல் காலேஜ் எல்லாம் ஒண்ணா தான் படிச்சோம் சார்.

என் நண்பன் ரொம்ப அறிவாளிங்க. ரொம்ப நல்லா படிப்பான்.

ஸ்கூல்ல இருந்து காலேஜ் எல்லாத்துலையும் அவன்தான் ஃபர்ஸ்ட் . கோல்ட் மெடல்லாம் வாங்கி இருக்கான்.

எங்க கேங்குலையே அவன்தான் ஸ்மார்ட் வேற. அவனிடம் நிறைய திறமைகள் வேற இருக்கு சார்"...

அப்படி இப்படி என்று தன் நண்பனை பற்றி புகழ்ந்து கொண்டிருந்தான் வேலவன்.

எல்லாத்தையும் பொறுமையாய் கேட்டு கொண்டிருந்தார் அப்பா.

"நல்லது தம்பி. உங்க வீட்ட பத்தி சொல்லுங்க" என்றார் அப்பா.

"அப்பா பேங்க்ல கிளெர்க்கா வேலை செய்றாரு அம்மா வீட்ல எங்கள பார்த்துக்குறாங்க". என்றான்..

"எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவ இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐ.டி கம்பனில இப்பதான் வேலைக்கு சேர்ந்திருக்கா" என்றான் வேலவன்..

"நானும் என் தங்கச்சியும் ரெண்டு பெரும் ரொம்ப திக் பிரிண்டுங்க சார். எதுவுமே மறைச்சிக்க மாட்டோம்" என்று தங்கச்சியை பற்றி புகழ்ந்தான்.

"நல்லது பா .. நீ உன் தங்கச்சிய உன் நண்பனுக்கு கட்டி கொடுப்பியா? என்று கேட்டார் அப்பா.

அந்த கேள்விய கேட்L தும் ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டான் வேலவன்.. போனில் கேட்டுக்கொண்டிருந்த உமாவும் தியாகுவுமும் தான்.

வேலவன் மௌனமாய் இருந்தான்.

"சொல்லுங்க தம்பி" என்று மறுபடியும் கேட்டார்.

"இல்லங்க அது வந்து" என்று இழுத்தான்.

"தம்பி நான் அப்படி கேட்டதுக்காக மன்னிச்சிக்கோங்க. நான் அந்த கேள்வி கேட்டதும் உங்க மனசுக்குள்ளே உங்கடைய நண்பனை பற்றி சில எதிர்மறையான எண்ணம் தோன்றியதை கவனிச்சேன். உன் நண்பனிடம் சின்ன சின்ன குறை இருக்குனு உங்க மௌனமே காட்டிக்கொடுத்திடிச்சி. நீங்க நல்ல நண்பனா இருந்திருந்தீங்கனா இந்நேரம் அந்த சின்ன சின்ன குறைகளெல்லாம் உன் நண்பனிடம் சொல்லி அத தீர்த்திருப்பீங்க. இவ்வளவு நாள் உங்களுக்குள்ளே புதைச்சி வச்சிருக்கீங்களே தம்பி. இது உங்க நண்பனுக்கு செய்ற பெரிய துரோகம் பா" என்றார்.

மேலும் தொடர்ந்தார் அப்பா "இப்ப கூட பிரச்சனை இல்ல தம்பி போன்ல இருக்குற உன் நண்பன் கிட்ட நீங்க என்னலாம் அவன்கிட்ட என்ன மாத்தணும்னு நெனைக்குரீங்கலோ அத சொல்லி சரி செய்யுங்க அதான் நல்ல நண்பனுக்கு அழகு தம்பி. உன் நண்பன் மாறிட்டான்னு நீங்க சொல்லுங்க தம்பி அடுத்த தேதிலயே கல்யாணத்த வச்சிக்கலாம்" என்று சொல்லி அவனை வழி அனுப்பி வைத்தார்.  வேலவன் ஒரு குற்ற உணர்ச்சியோடு அங்கிருந்து விடை பெற்றான்.

வேலவன் திரும்பி பார்க்குக்கு வந்து தியாகுவிடம் "மன்னிச்சிக்கோ மச்சி இத்தன நாள் சில விசயத்த உன்கிட்ட சொல்லாம மறைச்சிட்டேன் டா. உமா அப்பா சொல்லும்போது தான் நான் எவ்வளோ கேவலமா இருந்திருக்கேன்னு இப்பதான் எனக்கே புரிஞ்சுது மச்சி" என்று சொல்லும்போது லேசான கண்ணீர்த்துளி வேலவன் விழிகளில் எட்டிப்பார்த்தது.. 

அப்புறம் தியாகுவின் தப்பையும் அவன் மாற்ற வேண்டிய செயல்களை பற்றியும் எடுத்து சொன்னான் வேலவன்.

அதை கேட்டு முடித்ததும் "உனக்கு மட்டுமில்ல மச்சி எனக்கும் இப்பதான் நான் சில விசயத்த மாத்தனும்னு எனக்கே புரிஞ்சுது. எல்லாத்துலயும் பெஸ்டா இருந்தேன்னு லேசா கர்வம் இருந்திச்சி ஆனா சில விசயத்துல இவ்வளவு கேவலமா இருந்திருக்கேன்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு" என்று தன் தவறை உணர்ந்து பேசினான். 

உமா தன் தந்தையை தப்பா நினைச்சிட்டோமே என்று வருந்தினாள் அதே நேரத்தில் அப்பாவின் புத்திசாலிதனத்தை நினைத்து பெருமை அடைந்தாள்.


No comments: