முகத்தை மூடாதடி நீயும் மூடாதடி வீணாய் மூடாதடி
உன் மொத்த அழகையும் கண்கள் காட்டி கொடுத்து விட்டதே ...!!
உன் மொத்த அழகையும் கண்கள் காட்டி கொடுத்து விட்டதே ...!!
பார்க்காதடி என்னை பார்க்காதடி திரும்பி பார்க்காதடி
என் உயிர் மொத்தமும் உன் கண்கள் அள்ளிக்கொண்டு செல்லுதே.
என் உயிர் மொத்தமும் உன் கண்கள் அள்ளிக்கொண்டு செல்லுதே.
அவளை பின் தொடர வேண்டும் என்றும்
ஒரு போதும் நினைத்ததில்லை நானும் ..
ஒரு போதும் நினைத்ததில்லை நானும் ..
அவள் பாதம் பட்ட அருகே
என் பாதம் ஓடிச்செல்லுதே
பார்த்துப் பார்த்து செல்லுதே
தேடித்தேடி செல்லுதே...
என் பாதம் ஓடிச்செல்லுதே
பார்த்துப் பார்த்து செல்லுதே
தேடித்தேடி செல்லுதே...
திடமாய் இருந்த என்னை திரும்பி திரும்பி பார்த்து
திருடனாக ஆக்கி விட்டாயே....
திருடனாக ஆக்கி விட்டாயே....
பழகிய வாழ்வு என்று
பார்த்து பார்த்து இருந்தேனே
பரிதாபமாய் பறிகொடுத்தேனே
உன்னிடம் என் வாழ்வை
பார்த்து பார்த்து இருந்தேனே
பரிதாபமாய் பறிகொடுத்தேனே
உன்னிடம் என் வாழ்வை
பரிதாபமாய் பறிகொடுத்தேனே
மையிட்ட கண்களை வைத்துக்கொண்டு
தொலைவிலிருந்து வதைத்தது போதும்....
தொலைவிலிருந்து வதைத்தது போதும்....
என் மனைவியாக நீயும் வந்து விடடி....
என் கூடவே இருக்க வந்து விடடி....!!
என் கூடவே இருக்க வந்து விடடி....!!
1 comment:
Super super
Post a Comment