திங்கள் கிழமை எலெக்சன் வேற வருது. தேர்தலில் ஓட்டு போட போறோன்னு சாக்கு சொல்லி சனிக்கிழமையும் திங்கள்கிழமையும் லீவு கேட்கலாமா என்று யோசித்தான் மனோகர். அப்போதுதான் அவன் நினைவுக்கு வந்தது. மனோகரின் மேனேஜர் சரியான சிடு மூஞ்சி . எப்ப பாரு எரிஞ்சி விழுந்துட்டே இருப்பான்.. அவனுடைய தங்கை கல்யாணத்துக்கே ஒரு நாள்தான் லீவு கொடுத்தான். செவ்வாய்கிழமை கிளையன்ட் விசிட் வேற இருக்கு. இவன் சத்தியமா லீவு கொடுக்க மாட்டான் என்று முடிவு செய்து விட்டான்.
ஊருக்கு போறதுக்கு எஙகேயும் டிக்கெட் வேற கிடைக்காது என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டே இருந்தான் மனோகர்...
எல்லாரும் ஆபீஸ்ல இருந்து கலம்பியாச்சு இவன் மட்டும் உட்கார்ந்து இருப்பதை பார்த்து மேனேஜர் அவன் கிட்ட வந்தார்.
"ஏன் இன்னும் இங்க இருக்க. ஊருக்கு போகலையா" என்று கேட்டார்.
மனோகர் பெருமையுடன் "இல்ல சார். செவ்வாய் கிழமை நமக்கு க்ளையன்ட் விசிட் இருக்குல. அதனால போக வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். அது மட்டும் இல்ல நான் ஒரு ஓட்டு போடாததால பெரிசா ஒன்னும் நடக்க போறது இல்ல" என்று சொன்னான்.
இப்படி பேசினால் மேனேஜர் பாரட்டுவார்னு எதிர் பார்த்தான். ஆனால் நடந்ததோ வேறு..
மேனேஜர் கோபத்துடன் "என்னையா லூசு போல பேசுற... படிச்ச நம்மலே இப்படி பண்ணா எப்படி. நான் போய் ஒரு வோட்டு போடாததால ஒன்னும் ஆகாதுன்னு சொல்றியே. உன்னலாம் என்ன சொல்றதுனே தெரியல. நீ போடுற ஒரு ஓட்டு ஒரு வேட்பாளர அங்கீகரிக்குது, எப்படினா நீ நல்லவன்.. இந்த நாட்டுக்கு நீ நல்லது செய்வேன்னு நான் நம்புறேன்னு . அது புரியாம இப்படி உலர்னு இருக்க".
அவர் இப்படி பேசுவார்னு அவன் எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் ஆடிப்போய் விட்டான்.

"இல்ல சார் அது வந்து, இப்போ எங்கேயும் டிக்கட் வேற கிடைக்காது." என்று மழுப்பினான் மனோகர்.
"உனக்கு என்ன இப்ப ஊருக்கு போறதுக்கு டிக்கெட் தானே வேணும். கொஞ்சம் பொறு"ன்னு சொல்லிட்டு சில ட்ராவல்ஸ்க்கு போன் பண்ணார். அதில் ஒரு ட்ராவல்ஸ்ஸில டிக்கெட் இருந்தது உடனே அதை புக் பண்ணி விட்டு டிக்கெட்டை மெயில் அனுப்ப சொன்னார். அந்த டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டுவந்து மனோகரிடம் நீட்டினார்.
"இந்தா டிக்கெட் நீ போய் ஓட்டு போடு. ஓட்டு போட்டு முடிச்சதும் க்ளையன்ட் விசிட்டுக்கு வர முடியுமானு பாரு. வர முடியுலனா ஒன்னும் ப்ராப்ளம் இல்ல நான் பார்த்துக்குறேன்." என்று டிக்கெட்டை கொடுத்து விட்டு வீட்டுக்கு கலம்பினார்.
அவன் ஆச்சரியத்தில் கண்கள் விலகாமல் அவர் நடந்து போவதையே பார்த்துக்கொண்டிருந்தான். தன்னை நினைத்து வெட்கப்பட்டான்... அதே நேரத்தில் தன் மேனேஜரை நினைத்து பெருமைபட்டான்.
No comments:
Post a Comment