ஒரு காடு பக்கத்துல இருக்குற ஊர்ல எடக்கு முடக்கான பண்ணையார் ஒருவர் இருந்தார். அவர் எந்த கேள்விய கேட்டாலும் ஏடாகூடமாக தான் பதில் சொல்லுவார்.
அவரிடம் வேலை செய்யும் வேலையாள் ஒருவர் "ஐயா சாப்டீங்களா?" என கேட்டார்.
அதற்கு பண்ணையார் "நான் சாப்டுவேன் சாப்ட மாட்டேன். அத கேக்க நீ யாரு?" என்று திமிராய் பதில் சொன்னார்.
இன்னொரு நாள் "ஐயா எங்க வெளில போறீங்களா?" என கேட்டார் வேலையாள். "நான் வெளில போவேன் போ மாட்டேன். அத கேக்க நீ யாரு?" என ஏடாகூடமாய் பதில் சொன்னார்.
இந்த எடக்கு முடக்கான பேச்சு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே சென்றது... அந்த வேலையாளால் இதற்கு எதுவுமே செய்ய முடியவில்லை.
ஒரு காலை வேலையில் பண்ணையார் காட்டை சுற்றி பார்க்கும்போது எதிர்பாராமல் புதைக்குழியில் விழுந்து விட்டார்.
அவர் "காப்பாத்துங்க... காப்பாத்துங்க..." என்று கத்தினார்.
அந்த வழியாய் அவருடைய பணியாள் நடந்து வந்தார்.
அவனை பார்த்து "நல்ல வேல நீ வந்த காப்பாத்துடா காப்பாத்துடா" என கேட்டார்.
அதற்கு அந்த வேலையாள் "நான் காப்பாத்துவேன் காப்பாத்தமாட்டேன். அத கேக்க நீ யாரு ?" என கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்...
No comments:
Post a Comment