சினிமாவிற்கு போக டிக்கட் எடுத்து கொண்டு வந்தான் கணவன்...
வழக்கம் போல மனைவி மேக்கப் போட்டு கலம்ப தாமதமாகியும் கோபப்படமால் அமைதி காத்தான்...
அவளை உட்கார சொல்லிவிட்டு பைக்கை எடுத்து கொண்டு வேகமாக திரையரங்கை நோக்கி சென்று கொண்டிருந்தான்..
அப்போது மழை வர ஆரம்பித்தது... எங்கே ஒதுங்கறது என்று தேடிக்கொண்டே வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.. மனைவி வேற நனையுறாளே என்று பக்கவாட்டு கண்ணாடி வழியாக அவளை பார்த்தான்...
அவள் முகத்தை வானத்தை நோக்கி வைத்து கொண்டு புன்னகையால் மழையை ரசித்துக் கொண்டிருந்தாள்....
அதை கணவன் பார்த்ததும் வண்டியின் வேகம் குறைந்தது .... மனைவியிடம் திரும்பி ஒரு மெல்லிய புன்னகை புரிந்தான்... இருவரும் மழையை ரசித்துக்கொண்டே சினிமாவிற்கு செல்லாமல் ஒரு சின்ன நீண்டதொரு பயணத்தை தொடர்ந்தார்கள்....
2 comments:
Alagana payanam.. nice...
Beautiful story
Post a Comment