Thursday, 28 January 2016

உனக்காக நானே (கவிதை)


உன் விழியை நானும் தானே பார்த்தேனே பார்த்தேனே
காதல் என்ற ஒன்றை நானும் கண்டேனே கண்டேனே
உன்னை விட்டு நானும் பிரிந்து போக மாட்டேன் என்றேனே
பிரிந்தாலும் என் உடல் மட்டும் தான் பிரியும்
                                                                                    என்று சொல்வேனே நானே நானே ..!


உனக்காக நானே ஆகாயத்திலே தானே
கோட்டை ஒன்றை எழுப்புவேன்
அதில் அரசியாய் உன்னை  ஆக்குவேன்.

உன்னை எப்பொழுதும்
என் கண்ணில் வைத்து நானே காப்பேன்.
உன் காவலனாக காதலனாக
 இருப்பேனே பெண்ணே நானே ...!!  (உன் ...)

நீ தூங்கும் போது தூங்காமல்
என்றும் ரசிப்பேன் நானே உன்னையே

நீ நடக்கும் போது உன் கால்கள் வலிக்காமல்
 உன் பாதத்தை நானே தாங்குவேன் பெண்ணே..

மழை சாரலிலே நீ இருக்கையிலே
மழை துளியும் பனித்துளியாய் மாறியதே ...

கடற்கரையிலே நீ இருக்கையிலே
புயல் கூட தென்றலாய் மாறிடுமே....  (உன் ...)

என் சோகம் கரைந்திடுமே
உன் புன்னகையை நான் பார்த்தாலே..

என் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கிடுதே
என் அருகில் நீ இருந்தாலே....

நீயும் நானும் ஒன்றாக என்றுமே இருப்போமே
இணை பிரியாமல் கூடலும் ஊடலும் புரிந்து வாழ்வோமே...!!! (உன் ...)

1 comment:

Anonymous said...

Nice...