Sunday, 28 February 2016

மகனின் அறிவுரை (சிறுகதை)

"சிறப்பு தரிசனம் போயும் சாமிய சரியா பார்க்க முடியலையேங்க. எவ்வளோ கூட்டம்...!".. என்று பெரூ மூச்சு விட்டுக்கொண்டே வருத்தத்தோடு சொன்னால் மேகலா. "உண்டியில காசு போடுற இடம் கூட ஓரே கூட்டம். நல்ல வேலை நம்ம போடணும்னு நினைச்ச காசை கஷ்டப்பட்டு போட்டுட்டேன் " என்று அவர் பங்குக்கு பேசினார் கார்த்தியின் அப்பா.

மொத்தம் 7 பேர் இருந்தார்கள் காரினுல் அவர்களின் உறவினர்கள் 4 பேரையும் சேர்த்து. இவர்கள் அனைவரும் ஒரு புகழ் பெற்ற கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்கள்.


இவர்கள் பேசுறது எதுவுமே காதில் விழாதது போல காரின் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் கார்த்தி.

ஒரு முதியவர் ரோட்டை கடக்க முடியாமல் திண்டாடுவதை பார்க்கிறான் கார்த்தி...

 "அப்பா ஒரு நிமிஷம் வண்டிய நிறுத்துங்களேன்" என்றான் கார்த்தி.

"ஏன்?" என்று கேட்க "வண்டிய நிறுத்துங்கப்பா ப்ளீஸ்" என்று மறுபடியும் சொல்றான் கார்த்தி.

வண்டியை நிறுத்தியவுடன் இறங்கி வேகமாய் ஓடிப்போய் அந்த முதியவரிடம் "என்ன ஐயா ரோட்டை கிராஸ் பண்ணனுமா" என்று கேட்கிறான்.

"ஆமாம் தம்பி ரொம்ப நேரமா நிக்கிறேன். வண்டியே நிற்க மாட்டது" என்று பரிதாபாமாய்   சொன்னார் தாத்தா .
சரி தாத்தா "நான் கிராஸ் பண்ணி விடுறேன்" என்று சொன்னான் கார்த்தி.

"சரி தாத்தா மணி 7 ஆக போகுதுஇந்த நேரத்துல எங்க போறீங்க" என்று கேட்டான்.
"இல்ல தம்பி காலைல இருந்து என் மனைவிக்கு உடம்பு சரியில்ல அதனால எதாவது காசு கிடைக்குமானு பார்க்க போறேன் நைட்டு சாப்டணும்ல." என்று சொன்னார்...

"ஒ அப்படியா..! " என்று சொல்லிக் கொண்டே "யார்கிட்ட காசு கேக்க போறீங்க" என்று கேட்டவுடன் சிறிது அமைதியாய் இருந்தார் தாத்தா.

ஏன் அமைதியாய் இருக்கிறார் என்று அவர் மாட்டி இருந்த பையை பார்க்கும் போது அவர் பிச்சை எடுக்கிறார் என்பது அவனுக்கு புரிந்தது.

"ஒரு நாளைக்கு உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்" என்று கேட்டான் கார்த்தி.
அதற்கு "30 ரூபா விலிருந்து 50 ரூபா வரை கிடைக்கும் தம்பி" என்று சொன்னார் தாத்தா.
சிறிது யோசித்தவன். ஒரு நிமிஷம் இருங்க சொல்லி விட்டு அப்பாவிடம் ஓடினான்.

"அப்பா 200 கொடுங்க" என்றான்.

"ஏன்டா" என்று கேட்டார்.

"கொடுங்க பா" என்றான்.

"நீங்களும் என் கூட வாங்க பா" என்றான்.

"எங்கடா எதுக்குடா" என்று கேட்டார் அப்பா.

"வாங்க பா ப்ளீஸ்" என்றான் கார்த்தி.

எதுக்குன்னு புரியாமல் அப்பா அவன் பின்னாடியே போறார்.

அவன் அந்த முதியவர் முன்னாடி அப்பாவை கூப்பிட்டு கொண்டு போய் இந்த 200 ரூபாவை அவரிடம் கொடுத்து கொடுக்க சொல்றான்.

"தாத்தா இவர் என் அப்பா உங்கள பத்தி சொன்னதும் வந்தார். இந்தாங்க இந்த காசை வாங்கி கொண்டு போய் எதாவது சாப்டுங்க  அப்புறம் உங்க மனைவிக்கு எதாவது மாத்திரை வாங்கி கொண்டு போங்க". என்று சொன்னான் கார்த்தி.

நடப்பதை நம்ப முடியாமல் மெல்லமாய் கை நீட்டினார். கார்த்தியின் அப்பா புரியாமல் காசை கொடுத்தார்.

அதை வாங்கிக்கொண்டு அழுது கொண்டே "நீங்க தெய்வம் சார். நீங்களும் உங்க குடும்பமும் எப்போதும் சந்தோசமா இருக்கணும் சார். ரொம்ப நன்றி தம்பி உங்களுக்கு. நான் வரேன் தம்பி வரேன் சார்" என்று மனசார வாழ்த்திட்டு தாத்தா அவர்களிடம் இருந்து விடை பெற்றார்.

தாத்தா பேச்சைக் கேட்டதும் அப்பா கொஞ்சம் ஆடி போய் விட்டார்.

"நீங்க கோயில்ல கொடுத்த காசுக்கு அந்த தெய்வம் திருப்பி எதாவது கொடுக்குமானு தெரியாது பா. ஆனால் இப்ப காசு கொடுத்தீங்களே அவர் கண்ணுக்கு நீங்க தான் பா தெய்வம். உதவி தேவைப்படுறவங்களுக்கு தான் செய்யனும் பா அது கடவுளானாலும் சரி" என்று சொன்னான் கார்த்தி.

அப்பாவிற்கு சுரீரென்று உரைத்தது.

அப்பா கார்த்தியை கட்டிப்பிடித்து வாழ்த்தினார். 

நடந்ததை காருக்குள் இருப்பவர்களிடம் சொன்னார் அப்பா. அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்.

அப்பா தன் மகனை எண்ணி பெருமை பட்டுக்கொண்டே கார் ஓட்டத் தொடங்கினார்.

No comments: