அப்பா வீட்டுக்குள் நுழையும் போது பையன் WWE பார்த்துக்கொண்டிருந்தான்.
அதை பார்த்ததும் அப்பாவுக்கு கோபம் வந்தது.
வேகமாய் போய் பையனை ஓங்கி அறைந்தார் "எத்தன தடவ சொல்றது படிக்கிற நேரத்துல டிவி பாக்காதன்னு".
அடித்ததும் பையன் வலி தாங்காமல் அழுதான்.
அழுது கொண்டே சொன்னான் "சின்ன பையன் கிட்ட போய் வீரத்த காட்டுறீங்க. அதோ டிவி-ல தெரியுற ஆளுங்க கிட்ட சண்டை போட்டு வீரத்த காட்டுங்கன்னு".
இந்த பதிலை கேட்டதும் மெதுவாய் டிவியை திரும்பி பார்த்தார்.
டிவியில் bulk -ஆன மனிதர்கள் சண்டை போட்டதை பார்த்ததும் "இவனுங்க கிட்ட போய் சண்ட போடணுமா... இவனுங்க என்ன அசால்டா முறிச்சி போட்டுடுவான்களே"என்று அப்பா மனசுக்குள்ளே நினைத்துக்கொண்டே அந்த டிவியை ஒரு பயத்துடனே பார்த்தார்...!!!

No comments:
Post a Comment